ஒருவருக்கு தானமாக கொடுக்க கூடாதவை எவை என்று உங்களுக்கு தெரியுமா?

0

ஒருவருக்கு தானமாக கொடுக்க கூடாதவை எவை என்று உங்களுக்கு தெரியுமா?

தானம் வழங்குவது ஒரு நல்ல செயல். இது ஒருவகையான உதவியும் கூட. தானம் வழங்குவதன் மூலம் ஒருவரது புண்ணிய கணக்கு அதிகரிக்கும். இதுவரை தானமாக நாம் உணவு, பணம் மற்றும் இதர பொருட்களை வழங்குவோம். ஆனால் ஜோதிடத்தின் படி, ஒருசில பொருட்களை தானமாக வழங்கினால், வாழ்வில் பெரும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இக்கட்டுரையில் எந்த பொருட்களை எல்லாம் தானமாக வழங்கக்கூடாது என்று கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றைப் படித்து அந்த பொருட்களை தானமாக வழங்கும் பழக்கத்தை இனிமேல் கைவிடுங்கள்.

பழைய உணவுகள் பழைய உணவுகளை எப்போதும் தானமாக வழங்கக்கூடாது. ஒருவேளை அப்படி வழங்கினால், அது நீதிமன்ற வழக்குகள் மற்றும் வருமானத்திற்கு அதிகமான செலவை சந்திக்க வைக்கும்.

கூர்மையான மற்றும் ஆபத்தான பொருட்கள் கத்தி, கத்தரிக்கோல், ஊசி போன்ற பொருட்களையும் தானமாக வழங்கக்கூடாது. இதுவும் துரதிர்ஷ்டத்தை வரவழைக்கும். குறிப்பாக இது தம்பதியர்களுக்கு இடையே வாக்குவாதங்களை அதிகரிக்கும்.

உடைந்த பொருட்கள்/கிழிந்த துணிகள் உடைந்த பொருட்கள்/கிழிந்த துணிகளை தானமாக வழங்குவதைத் தவிர்க்க வேண்டும். சொல்லப்போனால் இம்மாதிரியான பொருட்களை வாங்க யாரும் விரும்பமாட்டார்கள். மேலும் இம்மாதிரியான பொருட்களை வழங்கினால், அதுவும் துரதிர்ஷ்டத்தை தான் உண்டாக்கும்.

துடைப்பம் ஜோதிடத்தின் படி, துடைப்பத்தை தானமாக வழங்குவது என்பது வீட்டில் இருக்கும் லட்சுமி தேவியை தானமாக வழங்குவதற்கு சமம். இது வீட்டில் பணப் பிரச்சனையைத் தான் வரவழைக்கும்.

பிளாஸ்டிக் பொருட்கள் பிளாஸ்டிக் பொருட்களை தானமாக வழங்குவதும் துரதிர்ஷ்டத்தை வரவழைக்கும். குறிப்பாக இந்த பொருட்களை தானமாக வழங்கினால், அது ஒருவரது வளர்ச்சியில் தடையை உண்டாக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஒரு மனிதரின் வாழ்க்கை ரகசியங்கள் – காண்ட விவரங்கள்!
Next articleஇந்த ராசிகளை சேர்ந்தவர்கள் திருமணம் செய்யக் கூடாதாம்.