சுடுநீரில் சிறிது கிராம்பு! வியக்க வைக்கும் அதிசயம்!

0

வாசனை திரவியங்களில் ஒன்று கிராம்பு. கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன.

இவ்வளவு மருத்துவ குணங்களையுடைய கிராம்பை சுடுநீரில் சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் அற்புத நன்மைகளை என்னவென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்.
கிராம்பு- 5
தண்ணீர்- 1 கப்

செய்முறை
ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் ஐந்து கிராம்பையும் சேர்த்து மீண்டும் ஒரு முறை கொதிக்க வைத்து இறக்கினால் ஆரோக்கியமான கிராம்பு டீ தயார்.

நன்மைகள்
பல் வலி இருப்பவர்கள் இந்த கிராம்பு கலந்த மூலிகை டீயை மிதமான சூட்டில் குடிப்பது மிகவும் நல்லது.

அடிக்கடி டீ குடிப்பதற்கு பதிலாக உடலுக்கு ஆரோக்கியமான கிராம்பு கலந்த மூலிகை டீயை பருகினால் உடலில் சோர்வுத் தன்மை நீங்கி சுறுசுறுப்பாக இருக்க வைக்கும்.

விட்டமின் சத்துக்கள் ஏராளமாக நிறைந்துக் காணப்படுகிறது.

காலையில் 1 கப் கிராம்பு டீ மற்றும் இதனுடன் சிறிது எலுமிச்சை சாறும் சேர்த்து குடித்தால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.

கிராம்பு கலந்த மூலிகை டீ தலைவலி, உயர் ரத்த அழுத்தம், செரிமானப் பிரச்சனை, கல்லீரல் குறைபாடு போன்ற பிரச்சனைகளைத் தடுத்து, பற்கள் பிரச்சனை, சீரான ரத்த ஓட்டம், இதயம் போன்றவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

சிறிது உப்புடன் கீரம்பை சேர்த்து சாப்பிட்டு வந்தால் தொண்டை அரிச்சல் மற்றும் கரகரப்பு நீங்கி தொண்டை குண்மடையும்.

கிராம்பு எண்ணெயுடன் சிறிதளவு தேன் மற்றும் வெள்ளைப்பூண்டு சாறு சேர்த்து தூங்க செல்வதற்கு முன்பு சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் கோளாறு நீங்கும்.

திராட்சைச் சாறுடன் கிராம்பு, மிளகு பொடியாக அரைத்து சிறிதளவு நீறுடம் சேர்த்து பருகிவர சிறுநீரகக் கோளாறு நீங்கும்.

எலுமிச்சை சாற்றுடன் கிராம்பு மற்றும் ஓமம் சேர்த்து பொடியாக்கி குடித்தால் வயிற்றுப்போக்கு குணமாகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவெள்ளைப்படுதலை நிரந்தரமாக தடுக்க இந்த பானம் ஒன்றே போதுமானது!
Next articleமீட்பு குழுவையே கண்கலங்க வைத்து வியக்க வைத்த கேரள சிறுமி!