எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் நவீன ஆணுறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!

0

எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் நவீன ஆணுறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
3 கோடியே 90 லட்சம் பேர் இதுவரை பலியாகி உள்ளனர்.

ஆனால், இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை, ஆணுறையை பயன்படுத்தினால் எய்ட்ஸ் பரவுவதை தடுக்க முடியும் என சுகாதார அமைப்புகள் கூறுகின்றன.

எனவே, ஆணுறையை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.

இதை தடுக்கும் வகையில் அதிநவீன ஆணுறை ஒன்று இப்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்ஸ்சாசில் உள்ள சுகாதார விஞ்ஞான மையத்தின் பெண் பேராசிரியர் மகுவா சவுத்திரி தலைமையிலான குழுவினர் இந்த ஆணுறையை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த ஆணுறை எலாஸ்டிக் பாலிமர் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஹைட்ரோஜெல் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆணுறையில் நுண்ணுயிர்களை கொல்லும் நோய் எதிர்ப்பு மருந்துகள் தடவப்பட்டு இருக்கும்.

இதை பயன்படுத்தும் போது எய்ட்ஸ் கிருமிகள் நுழைந்து விடாமல் தடுப்பதுடன் எய்ட்ஸ் கிருமிகளையும் கொன்று விடும். இதனால் எய்ட்ஸ் பரவுதலை முழுமையாக தடுக்க முடியும் என்று மகுவா சவுத்திரி கூறி உள்ளார்.

மருத்துவ துறை ஒப்புதலுக்கு பிறகு இன்னும் 6 மாதத்தில் இது விற்பனைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

மகுவா சவுத்திரி இந்தியாவை சேர்ந்தவர். அவர் இந்தியாவில் நுண்ணுயிர் துறையில் பட்டம் பெற்று பின்னர் அமெரிக்காவில் படித்தார். அங்கேயே பணியில் சேர்ந்து நவீன கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த சம்பவம்! கார் மோதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சிறுவன்!
Next articleபுதிதாக முளைத்த மூன்றாவது மார்பகம்‍‍_ஆச்சரியத்தில் பார்வையாளர்கள்!