எதிர்வரும் 9ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கின்றதா மக்களின் போராட்டம்!
எதிர்வரும் 9ஆம் திகதி இளைஞர்கள் ஒன்று திரள்வதற்கு திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அதனை தடுப்பதற்கே முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் கடந்த 9ஆம் திகதி சுனாமியின் முதலாவது அலை வந்தது. இரண்டாவது அலை இடையில் வந்து கொண்டிருக்கின்றது.
இதனை தடுத்து நிறுத்த முடியாது. நிச்சயமாக இராண்டாவது அலை வரும். அதன்போது செல்ல வேண்டிய இடத்தை ஆட்சியாளர்கள் தெரிவு செய்து கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.