Home Patti Vaithiyam எடை குறைக்க டயட் இருந்து எக்ஸ்ட்ரா வெயிட் போட்டுடீங்களா! ஏன் தெரியுமா! இதை படிங்க புரியும்!

எடை குறைக்க டயட் இருந்து எக்ஸ்ட்ரா வெயிட் போட்டுடீங்களா! ஏன் தெரியுமா! இதை படிங்க புரியும்!

0
938

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்தாலே மக்கள் டயட் முறைகளைத் தான் ப்லோ செய்கிறார்கள். இதற்காக பிடித்தமான உணவுகளைக் கூட அவர்கள் இழக்க தயாராகிறார்கள்.

டயட் என்று வரும் போது சில உணவுகளை அவர்கள் தவிர்க்க தான் வேண்டியிருக்கிறது. ஆனால் உண்மையில் உங்கள் மனமும் மூளையும் அதைச் செய்வதில்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.

பிடித்தமான உணவுகளிலிருந்து வேறு டயட் டிற்கு நீங்கள் மாறினாலும் உங்கள் பசி அதிகரிக்கத் தான் செய்யும்.

மேலும் டயட் இருக்கும் போது உணவைப் பற்றி நீங்கள் அதிகம் சிந்திப்பதால் உங்களுக்கு எடை இழப்பில் அது எதிர்மறை விளைவை உண்டாக்குகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஆய்வுகள்

இதுவரை நடத்தப்பட்ட 40 எடை இழப்பு ஆய்வுகளிலும் 75 சதவிகிதம் வரை இழந்ததை விட உடல் எடை அதிகரித்து இருப்பது தான் தெரிய வந்துள்ளது. உண்மையில் டயட் என்பது ஆரோக்கியமான உணவு முறை என்று அர்த்தம் தான். ஆனால் உணவை பற்றிய மன அழுத்தம், சதா டயட்டயே நினைத்திருப்பது உங்கள் பசியை அதிகரித்து உடல் எடையை அதிகரி விடுகிறது.

உணவைப் பற்றிய புரிதல்

இதற்காக நிறைய புத்தகங்கள் உள்ளன. tuitive Eating and Eat What You Love, Love What You Eat: எப்படி சாப்பிட வேண்டும், என்ன சாப்பிட வேண்டும், எப்பொழுது சாப்பிட வேண்டும், உணவைப் பற்றிய மன அழுத்தத்தை போக்குதல், பசியை பற்றிய புரிதல் போன்ற எல்லாவற்றையும் அறிந்து கொள்ள இந்த புத்தகங்கள் உதவுகிறது. இந்த புத்தகம் உணவைப் பற்றிய ஒரு புதிய புரிதலை தருகிறது. டயட் டிற்கு கடுமையான பட்டியலை போடுவதை தவிர்த்து உங்கள் உடல் எடையை சீராக வைக்க வேண்டிய உணவுப் பழக்கத்தை தருகிறது.

கட்டுப்பாடு

உங்களுக்கு நீங்களே உணவில் கட்டுப்பாடு வைத்துக் கொள்ளுங்கள். கடுமையான டயட்டை தவிர்த்து மிதமாக சாப்பிடுங்கள்.

இந்த மனநிலை உங்களுக்கு இப்போது மட்டுமில்ல எப்போதும் ஆரோக்கியமான உணவு என்ற மனநிலையை வளர்க்கும். எனவே இனி தடையில்லாமல் நேசிக்கிறவற்றை நீங்கள் தாராளமாக சாப்பிடலாம். எப்பொழுதும் ஆரோக்கியமான எடையை பராமரிக்கலாம். உங்களுக்கு விருப்பமான பிரியாணி, ஸ்ட்ராபெர்ரி, கப் கேக் என்று எதையும் சாப்பிடலாம். அதே நேரத்தில் உங்கள் உடல் எடையும் உங்கள் கைக்குள்.

Previous articleபல்லாயிரக்கணக்கான ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஈழத்து வாரிசு! வியக்கும் நடுவர்கள்! குவியும் பாராட்டுக்கள்!
Next articleஇந்த அழகிய பெண் என்ன செய்கின்றார் தெரியுமா! மகிழ்ச்சியில் இருந்தவர்களை நொடியில் மாற்றிய காட்சி!