எடையைக் குறைக்க சிம்பிள் வழிகள்!

0

உடல் எடை குறைந்து, பார்க்க அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உள்ளது. இதற்காக அதிகளவில் பணத்தை செலவு செய்து விலை உயர்ந்த உடற்பயிற்சிக் கருவிகள் வாங்குதல், டயட்டில் இருத்தல் போன்ற முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் பலர்.

நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை பார்ப்பவராக இருந்தால், ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் ஐந்து நிமிடங்கள் இடைவெளி எடுத்துக்கொள்ளுங்கள்.

இந்த ஐந்து நிமிடத்துக்கு சின்னதாக உங்கள் இடத்தைச் சுற்றி நடந்து வாருங்கள். இப்படிச் செய்வதன் மூலம் ஒரு நாளைக்கு 20 நிமிடம் வாக்கிங் சென்றதன் பலனை நீங்கள் பெறலாம்.

தினமும் 100 கலோரிகளை எரிப்பதன் மூலம் எந்த உணவுக் கட்டுப்பாடும் இன்றி ஓராண்டில் சாதாரணமாக ஐந்து கிலோ வரை எடையைக் குறைக்கலாம். அதற்கு..

• 20 நிமிடத்தில் 1 மைல் தூரத்துக்கு நடைபோடுங்கள்

• 20 நிமிடத்துக்கு தோட்டத்தில் புல் வெட்டுதல் அல்லது செடி நடும் வேலை செய்யுங்கள்

• 30 நிமிடத்துக்கு வீட்டை சுத்தம் செய்யுங்கள்.

• 10 நிமிடத்துக்கு ஓட்டப் பயிற்சி செய்யுங்கள்.

• 9 நிமிடத்துக்கு ஸ்கிப்பிங் செய்யுங்கள்

• 20 நிமிடத்துக்கு நன்கு குனிந்து தரையைத் துடையுங்கள்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleடயாபடீக் டயட் எது சரி? எது தப்பு? வைத்தியரின் அட்டவணை விளக்கம்!
Next articleவயிற்றின் கொழுப்பை குறைக்க வீட்டு சிகிச்சைகள்!