ஊழலைக் கண்டுபிடிக்க புதிய ரோபோ!

0

ஊழலைக் கண்டுபிடிக்க புதிய ரோபோ!

ஸ்பெயின் நாட்டில் ஊழல் குறித்த தகவல்களைத் தெரிவிக்க புதிய ரோபோ ஒன்றை நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஸ்பெயின் நாட்டில் உள்ள வல்லாடோலித் பல்கலைக்கழகம், மனிதர்கள் செய்யும் ஊழலைக் கண்டுபிடிக்கும் வகையில் ரோபோக்களை உருவாக்கியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட இந்த ரோபோவிடம், நாம் வியாபாரம் குறித்தோ, திட்டம் குறித்தோ தகவல் கொடுத்தால் அதில் ஊழல் நடந்துள்ளதா? இல்லையா? என்பதைக் கண்டறியும்.

இந்த ரோபோவில் இதுவரை நடந்த பல்வேறு ஊழல்கள் குறித்த தகவல்கள் அடங்கியிருக்கும். அதனையும், நாம் கொடுக்கும் தகவலையும் இந்த ரோபோ சரிபார்க்கும்.

அதேபோல தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, அந்த கட்சியின் செயல்பாடு குறித்து அவர் பேசியது, அந்த ஊழல் குறித்துக் கூறிய கருத்து என அனைத்தும் இந்த ரோபோ சரிபார்த்து ஊழலை கண்டறியும்.

மேலும் இந்த ரோபோ எந்த அளவுக்கு தவறு நடந்திருக்க வாய்ப்பிருக்கும் என்பது குறித்த சதவிதத்தைக் கொடுக்கும்.

அதில் 70 சதவிதத்துக்கும் அதிகமாக இருந்தால் கண்டிப்பாக ஊழல் நடக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

தற்போது தயாரிக்கப்பட்டுள்ள இந்த ரோபோவில் ஸ்பெயினில் கடந்த 2000ஆம் ஆண்டில் இருந்து நடந்த ஊழல் குறித்த தகவல்கள், ரோபோவின் நினைவகத்தில் ஏற்றப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகண்ணி வெடிகளை கண்டுபிடித்து அழிக்கும் குட்டி விமானம்!
Next articleவந்துவிட்டது நவீன தொட்டில், அம்மாக்களுக்கு சந்தோஷ செய்தி!