உயிருடன் இருக்கும் ஏலியன்! வெளிவந்த புதிய ஆதாரம்? அதிர்ச்சியில் உறைந்த கிரகவாசி ஆர்வலர்கள்!

0

சார்லோட்டுக்கு அருகிலுள்ள நார்மன் லேக் மீது ஒரு அடையாளம் தெரியாத பறக்கும் பொருளைக் கண்டறிந்து அதிர்ச்சியளிக்கின்ற காணொளி ஒன்றை ஜேசன் ஸ்விங் என்பவர் வெளியிட்டுள்ளார்.

ஜேசன் ஸ்விங் அந்த வீடியோவை ரெக்கார்ட் செய்யும் பொழுது பறக்கும் விண்வெளி கப்பல் என்று கத்திக்கொண்டு ரெகார்ட் செய்துள்ளார்.

காணொளி நடுக்கத்துடன் எடுக்கப்பட்டிருந்தாலும் வேற்று கிரகவாசி ஆர்வலர்கள் பலருக்கும் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், தீனி போடும் விதமாகவும் வலைத்தளத்தில் பரவி வருகிறது.

இந்த காணொளி வெளியான பின்னர், ஏலியன் உயிருடன் இருப்பதற்கு இது எடுத்துக்காட்டு என்ற சில தகவல்களும் பரவ ஆரம்பித்துள்ளது.

இதற்கிடையில் சில சதித்திட்ட கோட்பாட்டாளர்கள் அது ஒரு மேம்பட்ட இராணுவ விமானமாக இருக்கலாம் என்று நம்புகின்றனர்.

இந்த காணொளி என்னவென்பதை அறியாமலே 1,50,000 க்கும் அதிகமான மக்கள் அதை பார்த்து தங்கள் கருத்துக்களையம் பதிவு செய்து கொண்டிருக்கின்றன.

எனினும்,அடையாளம் தெரியாத பறக்கும் பொருளின் மர்மம் இன்னும் சரியாக விளக்கப்படவில்லை. தி ஹிடன் அண்டர்பெல்லி 2.0 விண்கலம் மற்றும் வேற்று உயிரின காணொளிக்களை மையமாகக் கொண்ட யூடூப் தளம் இந்த காணொளியை கடந்த வியாழன் அன்று வெளியிட்டுள்ளது.

அடையாளம் தெரியாத பறக்கும் பொருளை சிலர் உற்சாகமாக கண்டபோது, இன்னும் சிலர் இது அரசாங்கத்தின் புதுரக பெரிய பறக்கும் பொருளாக இருக்குமோ என்று வதந்திகளை பரப்பத்தொடங்கிவிட்டனர்.

அந்த பறக்கும் அடையாளம் தெரியாத பொருளை இன்னும் சிலர் குட்இயர் பிலிம்ப் ஏர்ஷிப் ஆக இருக்க கூடுமென்றும் கூறியுள்ளனர் .

குட்இயர் டயர் அண்ட் ரப்பர் நிறுவனத்தின் ஏர்ஷிப்கள் விளம்பரத்திற்காக பயன்படுத்தப்பட்டது மற்றும் தொலைக்காட்சிக்கான நேரடி விளையாட்டு நிகழ்வுகளின் வான்வழி காட்சிகள் ரெகார்டிங் செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசர்கார் பாடல் வீடியோ லீக் ஆனது, அப்செட்டில் படக்குழு!
Next articleபிரபல நடிகை திடீர் மரணம்: சோகத்தில் மூழ்கிய திரையுலகினர்!