வாயிலே அடிக்கடி புண் வருகிறது என்று பலர் கவலைப்படுகிறார்கள் ஆனால் மணத்தக்காளி சாப்பிடுங்க நல்லதுன்னு சொன்னால் கேட்டால் தானே இங்கிலீஷ் மருந்துகளிலேதான் நம்பிக்கை.
ரிபோஃப்ளேவின் உதடு, வாயின் உட்புறம் போன்றவற்றில் உள்ள மெல்லிய தசைகள் வெடிக்காமல் வழுவழுப்புடன் இருப்பதற்கு இந்தச் சத்து தேவைப்படுகிறது.
எவவகையான இயற்கை உணவுகளில் ரிபோஃப்ளேவின் அதிகம் காணப்படுகிறது தெரியுமா? ஆம்.. கீரை வகைகள், வேர்க்கடலை ஆகியவற்றைக் குறிப்பாகச் சொல்லலாம். பயிர் வகைகளிலும் இந்தச் சத்து அதிகம் உண்டு.
பயிர் வகைகளை சமைக்கும்போதோ அல்லது நிலக்கடலையை வேகவைக்கும் போதோ ரிபோஃப்ளேவின் சத்து அழிந்து விடுமா என்ற சந்தேகம் பலருக்கு ஏற்படும். சராசரி வெப்பத்தில் ரிபோஃப்ளேவின் அழிந்துவிடுவதில்லை. அத்க நேரம் சூரிய வெளிச்சத்தில் படும்படி இந்த உணவுப் பொருள்களை வைத்திருந்தால் மட்டுமே அவற்றில் உள்ள ரிபோஃப்ளேவின் சத்து கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவிடும்.
கருத்தரித்த பெண்களுக்கு அதிக அளவில் ரிபோஃப்ளேவின் தேவைப்படுமா என்ற கேழ்விக்கு அப்படி ஒன்றும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கவில்லை. கருத்தரித்த பெண்களின் சிறுநீரில் உள்ள ரிபோஃப்ளேவின் அளவு, குறைவாகவே இருக்கிறது என்பதை மட்டும் கண்டறிந்து இருக்கிறார்கள். இந்த வகையில் சற்றே அதிகமாக ரிபோஃப்ளேவின் கர்ப்பிணிப் பெண்களின் உணவில் இருக்க வேண்டும் என்று கூற இடம் உண்டு.
ரிபோஃப்ளேவின் என்பது Vitamin B யில் பல முக்கிய வகைகள் உண்டு. அவற்றில் இதுவும் ஒன்று. B2 என்பதில் இரண்டு முக்கிய என்ஸைம்கள் உண்டு. அவற்றில் ஒன்று ரிபோஃப்ளேவின். மற்றொன்று நியாஸின்.
அடுத்து Vitamin B1 என்பது தியாமின் என்ற வேதியல் பொருளைக் குறிக்கிறது. மூளை, நரம்புகள், தசைகள் மற்றும் மூளை சரியாக வேலை செய்ய Vitamin B1 தேவைப்படுகிறது Vitamin B1 சத்தானது ராகி, சோளம், முட்டை, பன்றிக்கறி, முந்திரி போன்ற பருப்புகள் ஆகியவற்றில் இருக்கிறது. உடலில் Vitamin B1 குறைவு ஏற்பட்டால் பெரிபெரி என்ற ஆரோக்கியக் குறைவு நோய் தோன்றும். ஆரம்பத்தில் பசியின்மை, களைப்பு, தசைகளில் வலி ஆகியவை இருக்கும். கவனிக்காமல் விட்டால் கைகால்களில் தாங்கமுடியாத வலி, இதயத்தின் பணியில் தடுமாற்றம் ஆகியவை ஏற்படலாம். அதிமாக இந்த Vitamin B1 ஐ உட்கொண்டால் ஆபத்து ஏற்படுமா? என்று பலர் கேழ்வி எழுப்புகின்றனர். இல்லை. பொதுவாகவே Vitamin B1 குழுவைச் சேர்ந்த பொருள்கள் தண்ணீரில் கரையக்கூடியவை.
உயிர்ச்சத்து B என்பது நீரில் கரையக்கூடிய எட்டுவகை உயிர்ச்சத்துக்கள் அடங்கிய கூட்டுக்குழுமம் ஆகும்.Vitamin B1 உள்ள உணவுகளை உட்கொள்ள விரும்புபவர்கள் சமைக்கும்போது நீரோடு சேர்ந்து Vitamin B1 வெளியேறி விட வாய்ப்பு உண்டு. ஆகவே, Vitamin B1 உள்ள காய்கறிகளை சூப், சாலட் போன்ற வழிகளில் உணவுகளாக உட்கொள்ளுவது நல்லது.
உயிர்ச்சத்து பி1 – (தயமின்)
உயிர்ச்சத்து பி2 – (இரைபோஃபிளவின்)
உயிர்ச்சத்து பி3 – (நியாசின் or நியாசினமைட்)
உயிர்ச்சத்து பி5 – (பன்டோதீனிக் அமிலம்)
உயிர்ச்சத்து பி6 – (பிரிடொக்சின், பிரிடொக்சல், or பிரிடொக்சாமைன்)
உயிர்ச்சத்து பி7 – (பயோட்டின்)
உயிர்ச்சத்து பி9 – (போலிக் அமிலம் அல்லது இலைக்காடி)
உயிர்ச்சத்து பி12 – (பலதரப்பட்ட கோபாலமின்கள்; பொதுவாக உயிர்ச்சத்து மாற்றீடுகளில் சையனோகோபாலமின் எனும் வடிவத்தில்)
உயிர்ச்சத்து B குறைபாடுட்டு நோய்கள்: பெரிபெரி, மறதி, உதட்டில் வெடிப்புகள், கிரந்தி அல்லது சிபிலிசு, அழற்சி, தூக்கமின்மை, தசைச்சோர்வு, மனக்குழப்பம், வயிற்றுப்போக்கு, குருதிச்சோகை, குழந்தை பிறப்பு நிலையில் குறைபாடுகள்.
By: Tamilpiththan