உடல் கொழுப்பைக் கரைக்கும் சிறு கிழங்கு பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!

0

சிறிய இலைகளுடன் வேரில் கொத்துக் கொத்தாக வளரும் சிறு கிழங்குகள் சிறிய உருண்டை வடிவத்தில் காணப்படும்.

இந்த சிறு கிழங்கில் புரதம் மற்றும் தாதுக்கள் ஏராளமாக இருப்பதுடன், மருத்துவ பலன்களையும் அதிகமாக கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் இந்த சிறு கிழங்கை சிவக்கிழங்கு, கார்த்திகைக் கிழங்கு கண் வலிக்கிழங்கு என்று கூறுவார்கள்.

கொழுப்பை கரைக்க சிறு கிழங்கை எப்படி சாப்பிட வேண்டும்?

சிறு கிழங்கை உலர்த்தி நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, அந்த நீரை பருகி வர, நம் உடலில் தேங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றி, உடல் எடை குறைக்கும்.

சிறு கிழங்கை உணவில் பொரியல் அல்லது மசியல் போன்ற முறைகளில் சமைத்து வந்தால், நம் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பீட்டா கரோடின் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்களை பெறலாம்.

சிறு கிழங்கின் மருத்துவ நன்மைகள்:

சிறு கிழங்கில் உள்ள தாதுக்கள் நம் உடலில் தேங்கியுள்ள கொழுப்பைப் குறைத்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது.

நம் உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்கி, இதய இயக்கத்தை சரிசெய்து சிறுநீரகம் மற்றும் வயிற்று பாதிப்புகளை குணமாக்குகிறது.

சிறு கிழங்கில் இருந்து எடுக்கப்படும் போர்ஸ்கோலின் எனும் வேதிப்பொருள், ரத்த அழுத்த கோளாறுகளை சரிசெய்து, இதயத்தில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கிறது.

சருமப் பொலிவு மற்றும் முக மருக்கள் போக்கும் கிரீம்கள் மற்றும் முகப்பூச்சுகளில் சிறு கிழங்கு பெரிதும் உதவுகிறது.

உடலில் வாதம் எனும் வாய்வு பாதிப்புகளை போக்கி, இடுப்பு, கை, கால் மற்றும் மூட்டு வலியை குணமாக்கி, ஆஸ்துமா மற்றும் புற்றுநோய்களையும் குணமாக்குகிறது.

கண் விழித்திரை பாதிப்புகள் போன்ற கண் பார்வைக் குறைபாடுகள் வராமல் தடுக்க உதவுகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசிபலன் 31.5.2018 வியாழக்கிழமை !
Next articleமூன்றே நாட்களில் நுரையீரலை சுத்தப்படுத்துவது எப்படி என்பதை பார்க்கலாம்!