உடல் எடையை குறைக்க பல்வேறு வழிகள் இருந்தாலும், ஆயுர்வேத முறைகள் என்பவை தனித்துவம் வாய்ந்தவை ஆகும்.
ஆயுர்வேத முறையில் உடல் எடையை குறைக்கும்போது பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாது என்பதே இதன் சிறப்பு அம்சம் ஆகும்.
வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி, ஆயுர்வேத முறையில் உடல் எடையை எவ்வாறு குறைப்பது என்பது குறித்து இங்கு காண்போம்.
தேன் மற்றும் எலுமிச்சை
தேன் மற்றும் எலுமிச்சையை பயன்படுத்தி உடல் எடையை குறைப்பது பொதுவான முறையாகும். இதற்கு வெதுவெதுப்பான நீர், எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து காலையில் வெறும் வயிற்றில் பருக வேண்டும்.
இதன் மூலம் பசி உணர்வு குறைந்து, உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும். குளிர் நீரில் இவற்றை கலந்து குடித்தால் சளி பிடிக்கும் வாய்ப்பு அதிகம்.
மிளகு
தேன், எலுமிச்சை கலந்த வெதுவெதுப்பான நீருடன் மிளகு கலந்து குடிப்பது மற்றொரு முறையாகும். ஆனால், இதனை வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது. ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே இந்த பானத்தை பருக வேண்டும். இதன்மூலம், உடலில் உள்ள கொழுப்பு குறையும்.
முட்டைக்கோஸ்
முட்டைக்கோஸை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிடலாம். ஆனால் பச்சையாக சாப்பிடுவதன் மூலம் உடல் எடை விரைவாக குறையும். மேலும் இது உடல் ஆரோக்கியத்திற்கும் உகந்தது ஆகும்.
அஜீரணத்தை சரி செய்தல்
உடல் எடை அதிகரிப்பதற்கு மற்றொரு காரணம் அஜீரணக் கோளாறு தான். எனவே, செரிமானத்திற்கு உதவும் அல்லது செரிமானத்தை அதிகரிக்கும் இஞ்சி, பப்பாளி, பூண்டு போன்ற உணவுகளை அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
செரிமான மண்டலத்தில் செரிக்க முடியாத உணவை வெளியேற்ற மஞ்சள், திரிகடுகம் சேர்ந்த கலவை பயன்படுத்த வேண்டும்.
காரமான உணவுகள்
தினமும் காரசாரமான உணவுகளை எடுத்துக் கொள்வதை நிறுத்தும்போது, செரிமான நெருப்பு அணையக்கூடும். இதன் காரணமாக உடல் எடை அதிகரிக்கும். எனவே, தினசரி உணவில் காரம் சரியான அளவு எடுத்துக் கொள்வதால் சீரான வழியில் உடல் எடை குறையும்.
கடுகு, மிளகு, சீரகம் போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம்.
மருந்து கலவை
’குட்கி’ எனும் ஆயுர்வேதத்தில் சித்திர மூலம், திரிகடுகம் ஆகியவற்றை பரிந்துரைக்கப்பட்ட அளவில் எடுத்து ஒரு கலவையை தயாரிக்கப்பட வேண்டும். இந்த கலவையுடன் நீர் சேர்த்து ஒரு திரவமாக்கி கொள்ள வேண்டும்.
இதனை தினமும் ஒரு முறை எடுத்துக் கொள்ள வேண்டும். உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள், தினமும் இரண்டு முறை கூட எடுத்துக் கொள்ளலாம். இதன் மூலம் உடல் எடை வெகுவாக குறையும்.
மூலிகைகள்
உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்காற்றும் மூலிகைகள் அக்கம், கடுக்காய், நெல்லிக்காய், அதிமதுரம், துளசி, கற்றாழை, குடம்புளி ஆகும். இவற்றை சரியான அளவில் எடுத்துக் கொண்டால் உடல் எடையை குறைக்கலாம். மாத்திரை வடிவிலும் இவை கிடைக்கின்றன.
இஞ்சி
சிறந்த ஆயுர்வேத மருந்தாக கருதப்படுவது இஞ்சி ஆகும். இது உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் காலை நேரத்தில் இஞ்சியை எடுத்துக் கொண்டால், உடல் குளிர்ச்சி அடைவது தடுக்கப்பட்டு வெப்பம் அதிகரிக்கும்.
இதன் மூலம் உடலில் உள்ள கொழுப்பு குறையும். தினமும் Fresh ஆக இஞ்சியை எடுத்துக் கொண்டால் நல்ல பலனை பெறலாம்.
விரதம்
ஒருநாள் முழுவதும் சாப்பிடாமல் விரதம் இருப்பதன் மூலம், உடலிலுள்ள செரிமான மண்டலத்தில் உள்ள நச்சுக்கள் அகற்றப்பட்டு தூய்மை படுத்தப்படும். வாரத்தில் ஒருநாள் விரதம் இருக்க உடல் எடையை குறைக்கலாம். விரத நாட்களில் க்ரீன் டீ, தண்ணீர் குடிப்பது நல்லது.




