உடல் எடையை ஈஸியா குறைக்க தொடர்ந்து 21 நாட்கள் இதை மட்டும் குடிங்க!

0

நாம் இன்று வரை உடல் எடை குறைப்பிற்காக எத்தனையே கடினமான டயட்டுக்களை மேற்கொண்டு வருகின்றது.

அதில் ஒன்று தான் எலும்பு சாறு டயட். இது கோழி எலும்பு, பன்றி, மாட்டின் முழங்கால் எலும்பு, ஆட்டுக்கால் போன்றவற்றில் தயாரிக்கப்படும் சூப் ஆகும்.

இது நம்முடைய சருமம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. உங்கள் உடலின் ஆற்றல் அளவை அதிகரித்து, வளர்சிதை மாற்ற நோய்க்குறிக்கான அறிகுறிகளில் நல்ல தாக்கத்தை உண்டாக்குகிறது.

இந்த டயட்டில் வாரத்தில் இரண்டு நாள் முழுவதும் எலும்பு சாறு மட்டுமே பருக வேண்டும். இப்படி தொடர்ந்து நான்கு வாரங்கள் பின்பற்றுவது அவசியமாகும்.

இந்த எலும்புச் சாறு அட்டவணையை தொடர்ந்து 21 நாட்கள் பின்பற்ற வேண்டும்.

அதில் 6 நாட்கள் மட்டுமே எலும்பு சாறு உட்கொள்ளுவதனால் உடல் கார்போஹைட்ரெட் சத்தை எரிக்காமல், கொழுப்பை எரிக்க ஊக்குவிக்கப்படுவதன் மூலம், எடை இழப்பு ஏற்படுகிறது. இதனால் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் அதிகரிக்கிறது.

தற்போது இந்த எலும்புச் சாறு டயட்டினை எப்படி பின்பற்றுவது என்பதை பார்ப்போம்.

முதல் நிலை
இந்த டயட்டை தொடங்கும்போது, ஒரு வாரத்தில் இரண்டு நாட்களைத் தேர்ந்தெடுத்து, அன்று முழுவதும் எலும்பு சாறு மட்டுமே பருக வேண்டும்.

அடுத்தடுத்த இரண்டு நாட்களாக இல்லாமல் இடைவெளி கொடுத்து அந்த நாட்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

இரண்டாம் நிலை
அந்த நாட்களில் ஒரு நாளில் 6 கிளாஸ் எலும்பு சாறு பருக வேண்டும். பன்றி, கோழி, வாத்து, மாடு, மீன் தலை அல்லது முயல் போன்றவற்றின் எலும்புகளில் இருந்து சாறு தயாரித்துப் பருகலாம்.

பூலியான் க்யுப், இறால் அல்லது போனிடோ போன்றவற்றால் தயாரிக்கப்படும் சூப் பருகுதல் தவிர்க்கப்பட வேண்டும்.

மூன்றாம் நிலை
சூப் பருகும் நாட்களில் வேறு எந்த உணவையும் சாப்பிடக் கூடாது.

நான்காம் நிலை
சூப் பருகும் நாட்களைத் தவிர இதர 5 நாட்களில், பேலியோ டயட்டில் பின்பற்றப்படும் பாரம்பரிய மூன்று வேளை உணவு திட்டம் பின்பற்றப் படவேண்டும்.

பேலியோ டயட் என்பது குறைந்த கார்போ, அதிக கொழுப்பு மற்றும் புரதம் கொண்ட உணவு அட்டவணை ஆகும்.

ஐந்தாம் நிலை
வார நாட்களில் தொடர்ந்து இல்லாத வெவ்வேறு இரு நாட்களில் சூப், மற்ற நாட்களில் பேலியோ டயட் என்ற இதே அட்டவணையை அடுத்த மூன்று வாரங்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதீபத்தால் ஜொலிக்கும் கார்த்திகை மாதம்! மேஷம் முதல் கடகம் வரை அதிர்ஷ்டம் எப்படி?
Next articleசர்சையை ஏற்படுத்திய புகைப்படம்! குடி பார்ட்டிக்கு சென்றார்களா அஞ்சலியும் அனுஷ்காவும்!