மனித இனம் இந்த பூமியில் இருக்கும் வரை நோய்களின் வீரியமும் தொடரும். முன்பு இருந்த நோய்கள் இப்போது குறைந்து விட்டது என்றே சொல்லலாம்.
ஆனால், இது ஒருபுறம் இருந்தாலும், புது புது நோய்களின் தாக்கம் கூடி கொண்டே போகிறது. இந்த வரிசையில் புற்றுநோய் தான் முதல் இடத்தில் பல ஆண்டுகளாக உள்ளது.
புற்றுநோயின் இந்த விஸ்வரூபத்திற்கு காரணம் புற்றுநோய் செல்கள் தான். மற்ற நோய்கள் ஒரு சில உறுப்புகளை மட்டுமே பாதிக்கும்.
ஆனால், புற்றநோய் தான் உடலில் பெரும்பாலான உறுப்புகளில் குடியேறி உடலை உருகுலைக்கும். அதனால் தான் இதன் வீரியம் மற்ற நோய்களை விட அதிக அளவில் உள்ளது. புற்றுநோயின் அபாயத்தில் இருந்து தப்பிக்க சில இரகசிய வழிமுறைகளை புற்றுநோய் மருத்துவர்கள் கடைபிடித்து வருகின்றனர்.
அவை என்னென்ன இரகசிய வழிகள் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மெடிட்டேரியன் உணவுகள்
புற்றுநோய் மருத்துவர்கள் பெரும்பாலும் ஆலிவ் எண்ணெய் சேர்த்த உணவுகளை உண்பார்களாம். இது புற்றநோயை தடுக்கும் ஆற்றல் கொண்டது. அதே போன்று சாப்பிடும் உணவில் மஞ்சள், ப்ரோக்கோலி, பூண்டு, போன்ற உணவுகளை அதிகம் சேர்த்து கொள்வார்களாம்.
மூளை திறன்
எப்போதுமே மூளைக்கு வேலை கொடுத்து கொண்டே இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இது மூளையின் நியூரான்ஸ்களை மிக சுறுசுப்பாக வைக்கும். இதனால் உடல் ஆரோக்கியத்தை சீராக வைத்து கொள்ள இயலும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மீன்
இன்றைய கால சூழலில் நல்லதை நாம் வெறுத்து ஒதுக்கி தீயவற்றை அதிக அளவில் எடுத்து கொள்கிறோம். அந்த வகையில் அதிக அளவில் இறைச்சி உணவை நாம் சாப்பிடுகின்றோம். பெரும்பாலும் இந்த வகை உணவுகளை மருத்துவர்கள் தவிர்த்தே வருகின்றனர். மாறாக மீனை அதிக அளவில் உணவில் சேர்த்து கொள்கின்றனர். இது உடலுக்கு அதிக ஆரோக்கியத்தை தந்து பலவித பாதிப்பில் இருந்து காக்குமாம்.
சம நிலை
எதிர்ப்பு சக்தி குறைபாடு ஏற்படாமல் இருந்தாலே மிக எளிதில் புற்றுநோய் அபாயத்தில் இருந்து தப்பித்து கொள்ளலாம். இதற்கு உடல் நிலை மற்றும் மன நிலை இரண்டுமே சீராக இருக்க வேண்டும். மன நிலையை சீராக வைக்கவில்லை என்றால் ஹார்மோன் குறைபாடு ஏற்பட்டு நோய்களின் தாக்கம் எளிதில் நம்மை வந்து சேரும்.
சூரிய ஒளி
புற்றுநோய் அபாயம் மனித உடலுக்கு எளிதில் வருவதற்கு சூரிய ஒளியும் முக்கிய காரணம். உடலில் அதிக அளவு சூரிய ஒளி பட்டால் புற்றுநோயின் தாக்கமும் கூடுதலாகவே இருக்கும் என ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். எனவே, சூரியனிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருங்கள் என மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.