இந்த மிளகாயை எண்ணெயாக காய்ச்சி தலையில் தேய்ச்சா கண்டிப்பா முடி கிடுகிடுனு வளரும்! எப்படி தெரியுமா!

0

சுற்றுப்புற மாசுக்கள் எல்லாம் அதிகமான இந்த நவீன காலத்தில் கூந்தல் உதிர்வது என்பது ஒரு பிரச்சினையாகி வருகிறது. இதில் சில சமயங்களில் கூந்தல் வளர்ச்சி என்பதும் பெரும் தாமதமான விஷயமாகி போய் விடுகிறது.

இந்த மாதிரி கூந்தல் உதிர்வு ஏற்பட முக்கியமான காரணங்கள் சுற்றுச்சூழல் மாசு, வாழ்க்கை முறை, ஹார்மோன் சமநிலையின்மை போன்றவை காரணமாக அமைகிறது.

இதனால் கூந்தல் உதிர்வு மட்டுமில்லாமல் பொடுகு, கூந்தல் உடைந்து போவது, பிளவுபட்ட கூந்தல் நுனிகள் போன்ற பிரச்சினைகளும் சேர்ந்தே வருகிறது.

இந்த கூந்தல் உதிர்தல் பிரச்சினையை போக்க ஏராளமான சாம்பு, க்ரீம்கள் என்று மார்க்கெட்டில் வலம் வந்தாலும் இதில் சேர்க்கப்படும் கெமிக்கல்களால் பக்க விளைவுகள் மட்டுமே ஏற்படுகின்றன. எனவே இந்த பிரச்சினையை போக்க இயற்கை வழியே சிறந்தது.

அப்படிப்பட்ட இயற்கை பொருள் தான் இந்த மிளகாய். ஆமாங்க இந்த கெயான் மிளகாய் இயற்கையாகவே நம் கூந்தல் வளர்ச்சியை தூண்டக் கூடியது.

சிவப்பு மிளகாய்

இந்த சிவப்பு மிளகாயில் உள்ள கேப்சைன் என்னும் ஒருவித வேதிப்பொருள் தான் கூந்தல் வளர்ச்சியைத் தூண்டுகிறது. அதோடு இது கூந்தலுக்கு பளபளப்பையும் மென்மையையும் மிருதுவான தன்மையையும் கொடுக்கிறது.

ஆலிவ் ஆயில் மற்றும் சிவப்பு மிளகாய்
தேவையான பொருட்கள்
  1. 1 கப் ஆலிவ் ஆயில்
  2. 5-6 மிளகாய்
பயன்படுத்தும் முறை
  • முதலில் சிவப்பு மிளகாயை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
  • இந்த மிளகாயை ஆலிவ் ஆயிலில் சேர்த்து ஒரு பாட்டிலில் அடைத்து 10-15 நாட்கள் குளிர்ந்த இடத்தில் வைத்து விடுங்கள்.
  • சில நாட்கள் கழித்து எண்ணெயை மட்டும் வடிகட்டிவிட்டு மிளகாயை தனியாக எடுத்து தூக்கி எறிந்து விடுங்கள்.
  • இந்த எண்ணெய்யை உங்கள் கூந்தல் மற்றும் மயிர் வேர்க்கால்களில் தடவி ஒரு மணி ஊற வைக்க வேண்டும்.
  • பிறகு மென்மையான ஹெர்பல் சாம்பு கொண்டு அலசவும். இதை வாரத்திற்கு 3 முறை என செய்து வந்தால் கூந்தல் அபார வளர்ச்சி ஏற்படுவதை உங்கள் கண் கூடாக பார்க்கலாம்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவெள்ளரிக்காயை வெறுத்து ஒதுக்குபவரா நீங்கள்! இதைப் படித்தால் உங்களது தவறு புரியும்!
Next articleஉடலையே உருகுலைக்கும் புற்றுநோயை வராமல் தடுக்க மருத்துவர்கள் கடைபிடிக்கும் இரகசியங்கள் என்ன தெரியுமா!