7 நாட்களில் தொப்பையை குறைத்து தட்டையான வயிற்றைப் பெற வேண்டுமா! இப்படி மட்டும் செய்யுங்கள்!

0

உடல் எடை குறித்து கவலைப்படும் நபர்கள் யாவரும் மிகுந்த கவலைப்படும் ஓர் விஷயம் என்றால் தொப்பையாகத்தான் இருக்கும்.

தொப்பையினால் உடலில் எண்ணற்ற உபாதைகள் ஏற்படுகிறது. சர்க்கரை நோய்,மாரடைப்பு ஆகியவை அவற்றில் முதன்மையானது.

உங்களது உடலை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டுமெனில் அவற்றில் முதன்மையானதாக இருக்கக்கூடிய தொப்பையை குறைக்க வேண்டும். தொப்பையை குறைக்க வேண்டும் என்று சொல்லி குறிப்பிட்ட உணவை அறவே தவிர்ப்பது.

சில வகைகளை தொடர்ந்து அதிகமாக எடுத்துக் கொள்வதும் ஆபத்தானது. ஆகையால் சரிவிகித உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் அதே சமயம் உங்களது தொப்பையும் குறைக்க வேண்டும்.

தொப்பையை குறைக்க உணவு முறையில் மட்டும் மாற்றங்களை கொண்டு வந்தால் போதாது உங்களது வாழ்க்கை முறையிலும் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். அப்படி என்ன முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

நட்ஸ்

உடல் எடை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் கை வைப்பது உணவில் தான். வகை தொகை இல்லாமல் தாங்கள் சாப்பிடும் உணவைக் குறைத்தால் மட்டும் போதும் எண்று தவறாக நினைத்து மொத்தமாக உணவு வகைகளை கட் செய்வார்கள்.

இது உங்கள் உடலுக்கு மேலும் தீங்கை ஏற்படுத்துமே ஒழிய தொப்பையை குறைக்காது. நீங்கள் ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டிய நேரத்தில் எண்ணெயில் பொறித்த உணவுகளை சாப்பிடாமல் நட்ஸ் வகைகளைச் சாப்பிடலாம். இதில் ஆரோக்கியமான கொழுப்பு வகைகளே இருக்கின்றன.

தாமதமான நொடிகள்

உங்களது நாளை எவ்வளவு சீக்கிரம் துவங்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் துவங்குங்கள். காலையில் விழித்த பிறகும், படுக்கையிலையே சோம்பலாக தூங்கிக் கொண்டிருப்பது தான் உங்களது தொப்பையை அதிகரிக்கும் ஓர் செயலாக இருக்கிறது.

பெர்ரீஸ்

சர்க்கரை மற்றும் இனிப்புகளுக்கு பதிலாக பெர்ரீ பழங்களை சாப்பிடலாம். இப்படி சர்க்கரையை தவிர்ப்பதாலும் பெர்ரீ பழங்களை எடுப்பதாலும் தொப்பை குறைவதோடு இடுப்புப் பகுதியும் குறைத்திட முடியும்.

எண்ணெய் உணவுகள்

நீங்கள் சாப்பிடும் உணவுகளில் ஹைட்ரோஜெனேடட்டட் ஆயில் பயன்படுத்தி சமைக்கப்பட்டிருந்தால் அவற்றை தயவு செய்து நீங்கள் எடுக்காதீர்கள். இதனை தொடர்ந்து எடுத்தால் உங்கள் உடலில் ட்ரான்ஸ் ஃபேட் அதிகரித்து மாரடைப்பு ஏற்படக்கூடும்.

பிரட் வகைகள்

தொப்பையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் தவிர்க்க வேண்டியது பிரட் வகைகளைத் தான். அதாவது எல்லா பேக்கரி ஐயிட்டங்களையும் நீங்கள் தவிர்க்க வேண்டும். இதனைத் தொடர்ந்து சாப்பிடுவதால் ப்ரீ டயாப்பட்டிக் பிரச்சனைகள் ஏற்பட காரணமாகிடும்.

தண்ணீர்

ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். அப்போது தான் உடல் வறட்சியில்லாமல் இருக்கும் அதோடு உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். அது,மட்டுமன்றி சீரான இடைவேளியில் தண்ணீர் குடிப்பதால் உங்கள் உடலில் வறட்சி ஏற்படாது. இதனால் உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கும். இதனால் வயிற்றைச் சுற்றி கொழுப்பு படியாது.

மீன்

மற்ற அசைவ உணவுகளை விட மீன் நீங்கள் தாரளமாக சாப்பிடலாம். அதிலும் சாலமன் வகை மீனில் ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. இது உங்கள் உடலின் செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாததாகும். இந்த மீன் சாப்பிடுவதால் நீண்ட நேரம் பசியெடுக்காது.

எலுமிச்சை சாறு

கொழுப்பை கரைக்க, அதுவும் குறிப்பாக வயிற்றைச் சூற்றியிருக்கும் கொழுப்பை கரைக்க நீங்கள் அவசியம் சிட்ரஸ் பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு கலந்து குடிக்க வேண்டும். வெதுவெதுப்பான நீரில் இரண்டு ஸ்பூன் எலும்மிச்சை சாறு கலந்து குடிக்கலாம்.சுவையூட்டிகளாக தேன், இனிப்பு எதுவும் சேர்த்த்துக்கொள்ளக்கூடாது, சூடான நீரில் தான் எலுமிச்சை சாறு கலந்து குடிக்க வேண்டும்.

இப்படி தொடர்ந்து 7 நாட்கள் செய்து வந்தால் தொப்பை குறைந்து தட்டையான வயிற்றை பெற முடியும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉடலையே உருகுலைக்கும் புற்றுநோயை வராமல் தடுக்க மருத்துவர்கள் கடைபிடிக்கும் இரகசியங்கள் என்ன தெரியுமா!
Next articleமுட்டை பிரியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! வெள்ளை பகுதியை சாப்பிட்டால் ஆபத்தா!