உடலுறவில் ஈடுபட்ட பிறகு ஏன் குளிக்காமல் வெளியே செல்லக்கூடாது தெரியுமா?

0

உடலுறவில் ஈடுபட்ட பிறகு ஏன் குளிக்காமல் வெளியே செல்லக்கூடாது தெரியுமா?

இந்து கடவுள்கள் இன்றி அனைத்து கடவுள்களுமே மனிதர்கள் சுத்தமாக இருக்க வேண்டுமென்றுதான் அறிவுறுத்துகிறார்கள். கடவுளை வழிபடுவதற்கு உடல் மட்டுமின்றி உள்ளமும் தூய்மையாக இருக்க வேண்டியது அவசியம். இந்து புராணங்களின் படி ஒருவர் ஒரு நாளைக்கு மூன்று முறை குளிக்க வேண்டும். அதிகாலையில் ஒருமுறை, மத்திய நேரத்தில் ஒருமுறை மற்றும் சூரியன் மறைந்த பிறகு ஒருமுறை என மூன்று முறை குளிக்க வேண்டும்.

குளிப்பது ஆன்மீகரீதியாக மட்டுமின்றி ஆரோக்கியரீதியாகவும் உங்களுக்கு பல நன்மைகளை வழங்கக்கூடியது. நமது சாஸ்திரங்களில் சில செயல்களை செய்த பின் நிச்சயம் குளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அவ்வாறு குளிக்கவில்லை எனில் அது உங்களுக்கு பல பிரச்சினைகளை உண்டாக்கும். இந்த பதிவில் எந்தெந்த காரியங்களுக்கு பின் குளிக்க வேண்டும் என்று புராணங்கள் கூறுகிறது என்று பார்க்கலாம்.

சாஸ்திரங்களின் படி அனைவருமே கை மற்றும் கால்களை வெளியில் சென்று வந்த பிறகோ அல்லது சாப்பிடுவதற்கு முன்னரோ கழுவ வேண்டும் என்று கூறப்படுகிறது. வேதங்களில் கூறியுள்ள படி தினமும் குளிப்பது நமது உடல் மற்றும் மனஆரோக்கியத்தை அதிகரிக்கும். நமது உடலில் நோய்கள் பரவுவதையும் குளியல் தடுக்கும்.

உலகின் தலைசிறந்த ஞானிகளில் ஒருவர் சாணக்கியர். அவர் தனது நூலில் கூறியுள்ள படி அனைவரும் நன்கு செயல்களை செய்தபின்னர் குளிக்க வேண்டும். அவ்வாறு குளிக்காமல் தவறும் பட்சத்தில் அது உங்களுக்கு பல ஆபத்துக்களையும், பிரச்சினைகளையும் உண்டாக்கலாம்.

சாணக்கியரின் கூற்றுப்படி ஆரோக்கியமாக இருப்பதே ஒருவரின் மிகப்பெரிய செல்வமாகும். நாம் கடைபிடிக்கும் உணவுமுறையும், நாம் வாழும் வாழ்க்கை முறையும்தான் நமது ஆரோக்கியத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாகும். உங்களின் பல பாவங்களும், நோய்களும் இந்த குளியல் மூலம் சரிசெய்யப்படலாம். எந்தெந்த காரியங்களுக்கு பின்னர் கண்டிப்பாக குளிக்க வேண்டும் என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

இறுதிச்சடங்குக்கு சென்று வந்த பிறகு ஒருவர் கண்டிப்பாக வீட்டிற்க்குள் நுழையும் முன் குளிக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். ஒருவர் இறந்த பிறகு அவரின் உடல் பாக்டீரியாக்களுக்கு எதிராக போராடும் தன்மையை இழக்கிறது, இதனால் அது சிதைந்து பரவத் தொடங்கும். பிணத்தை எரிக்கும் போது இறந்தவர்களின் உடலில் இருக்கும் பாக்டீரியாக்கள் காற்றில் பரவ தொடங்கும். அதனால்தான் இறுதி சடங்கிற்கு சென்று வந்த பிறகு யாரையும் தொடுவதற்கு முன் குளிக்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.

சாணக்கியரின் கூற்றுப்படி தம்பதிகள் உடலுறவில் ஈடுபட்ட பிறகு ஆன்மீக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தகுதி அற்றவர்கள் ஆகிறார்கள். எனவே அவர்கள் உடலுறவிற்கு பின் எந்த காரியம் செய்வதாக இருந்தாலும் குளித்து விட்டே தொடங்க வேண்டும். மேலும் உடலுறவின் மீது உண்டாகும் வேர்வையால் உங்கள் உடல் கிருமிகளால் எளிதில் தாக்கப்படலாம். இந்த சூழ்நிலையில் நீங்கள் குளிக்காமல் வெளியே செல்வது நீங்கள் எளிதில் நோயில் விழுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

சாணக்கியர் சுட்டி காட்டியுள்ளபடி ஆரோக்கியமான மற்றும் ஒளிரும் சருமத்திற்கு ஒருவர் வாரத்திற்கு ஒரு முறையாவது முழு உடலுக்கும் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். நமது சருமத்தில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும் பொருட்டு எண்ணெயானது சருமத்தில் இருக்கும் துளைகளை திறந்து வைக்கும். எனவே நமது உடலில் இருக்கும் மற்ற சத்துக்களும் விரைவில் வெளியேறாமல் இருக்க உடனடியாக குளிக்க வேண்டியது அவசியமாகும்.

சாணக்கியரின் அறிவுரைப்படி முடி வெட்டிய பிறகும் உடனடியாக குளிப்பது என்பது மிகவும் முக்கியமானதாகும். நமது உடலில் ஒட்டியிருக்கும் சிறு முடிகளை கூட உடனடியாக சுத்தம் செய்ய வேண்டியது அவசியமாகும். ஏனெனில் நமது உடலில் ஓட்டும் இந்த வெட்டப்பட்ட முடிகள் பாக்டீரியாக்களுக்கு உணவாக மாறிவிடும். இந்த சாஸ்திரங்களில் பல வகையான ஸ்நானங்கள் உள்ளது, அது என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

திறந்த வெளியில் சூரியனுக்கு கீழே கைகளை மேலே உயர்த்தி கிழக்கு திசை பார்த்து நிற்க வேண்டும். கண்களை மூடி சூரிய ஒளி உங்கள் மீது 10 நிமிடமாவது படும்படி நிற்க வேண்டும். இது சூரிய குழியல் எனப்படும், உங்கள் உடலில் இருக்கும் எவ்வளவு வலிமையான பாக்டீரியாவாக இருந்தாலும் இதன்மூலம் அழிக்கப்பட்டுவிடும்.

இந்த வகை குளியலில் ஒருவர் பூமிக்கு மரியாதை செய்யும் பொருட்டு, தன் உடலில் ஈர மணலையோ அல்லது களிமண்ணையோ தேய்த்து கொள்ள வேண்டும். அவரது உடலில் இருக்கும் அனைத்து துளைகளும் வெளியே தெரியும் அளவிற்கு தேய்க்க வேண்டும். 15 நிமிடம் கழித்து துணியால் மண்ணை துடைக்க குளிக்க வேண்டும்.

மண ஸ்நானம் முடிந்த பிறகு தண்ணீரால் உடலை கழுவுவதற்கு பெயர்தான் மஹேந்திர ஸ்நானம். தினமும் இவ்வாறு குளிப்பது உங்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleயாழ்ப்பாணத்திலிருந்து குறைந்த கட்டணத்தில் இந்தியா செல்லலாம் !
Next articleஅவசர எச்சரிக்கை! இலங்கையர்களின் உயிருக்கு ஆபத்தாக மாறிய ரம்புட்டான்