உடலில் ஏற்படும் புற்றுநோய்க் கட்டிகள் உருவாவதைத் தடுக்கும்!

0

புற்றுநோய்:

நூல்கோலின் வேர்ப்பகுதிகளில் உள்ள பீட்டா கரோட்டின், ஆரோக்கியமான சவ்வுகள் உற்பத்தியாக உதவுவதுடன், நோய் எதிர்ப்புத் திறனையும் அதிகரித்து மாரடப்பு வராமல் தடுக்கின்ற அதேவேளை அதிலுள்ள அதீத விட்டமின் கே சத்தானது இதயக் கோளாறுகள் வராமல் காக்கிறது. மேலும், நூல்கோலின் கீரையானது, உடலில் உள்ள கொழுப்பைப் பயன்படுத்தி பித்தநீரை உறிஞ்சிக் கொள்வதனால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் குறைவடைகின்றதுடன், அதிலுள்ள ஃபோலேட்டும் இதயத்துக்கு இதமானதாக காணப்படுகின்றது.

தினமும், உணவில் சிறிதளவு நூல்கோல் சேர்த்துக் கொள்வதன் மூலம் மார்பகப் புற்றுநோய், பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய்கள் வராமல் தப்பிக்க முடிவதுடன், குறிப்பாக புற்றுநோய்க் கட்டிகள் உருவாகுதல் தடுக்கப்படுகின்றது. மேலும், நூல்கோலின் வேர்ப்பகுதிகளில் உள்ள பீட்டா கரோட்டின், ஆரோக்கியமான சவ்வுகள் உற்பத்தியாக உதவுவதுடன், நோய் எதிர்ப்புத் திறனையும் அதிகரிககின்றது.

சமிபாட்டை அதிகரிக்கும்.

நூல்கோலில் நார்ச்சத்து அதிகளவில் காணப்படுவதனால் இயல்பிலேயே சமிபாட்டுத் தன்மையை சீராக்குவதுடன், வயிற்று உபாதைகளுக்கும் வயிற்றுப்புண்ணுக்கும் காரணமான பாக்டீரியாவை எதிர்த்து அழிக்கின்றது.

உடல் துர்நாற்றத்தைக் குறைக்கும்.

கோடை காலங்களில் ஏற்படக் கூடிய உடல்நாற்ற வாடையை நூல்கோல் சாற்றினைப் பருகுவதன் மூலம் தவிர்க்க முடியும்.

கலோரிகள் குறைவு

நூல்கோலில் கலோரிகள் குறைவாக காணப்படுகின்றதுடன், இதிலுள்ள அதிகளவான நார்ச்சத்துகள் வளர்சிதை மாற்றத்தை சீராக்கி, பெருங்குடல் இயக்கத்தை செம்மையாக்கி, மலச்சிக்கலைப் போக்கி எடைக் குறைப்புக்கு உதவுகின்றன.

எலும்பு வளர்ச்சிக்கு நல்லது.

குறைந்தளவான காலோரிகள் காரணமாக உடல் எடை அதிகரிக்காது என்பதுடன், இதில் 6. வைட்டமின் ஏ, சி, இ, மாங்கனீசு மற்றும் பீட்டாகரோட்டின் என்பனவும் காணப்படுகின்றன.

நுரையீரல் தொடர்பான பிரச்சனைகளைச் சரிசெய்யும்.

நூல்கோலின் மேலுள்ள கீரைப்பகுதியில் விட்டமின் ஏ அதிகளவில் காப்படுவதனால் நுரையீரல் ஆரோக்கியத்துக்குப் பெரிதும் உதவுகின்றது.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article10.11.2018 இன்றைய ராசிப்பலன் – ஐப்பசி 24, சனிக்கிழமை!
Next articleமைத்திரியின் மகளின் அதிரடி முடிவு! தந்தையை கைவிட்டு மஹிந்தவுடன்!