உங்க முடிக்கு 2 மடங்கு அடர்த்தியை தரும் 2 ஸ்பூன் சோயா பால்! எப்படி தெரியுமா?

0

சோயா பால்! இதைப் போல் அதிக புரதம் இருக்கும் உணவு பொருள் இல்லை. இது உடலுக்கு குறிப்பாக பெண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆரோக்கியத்தை தரும். அதுபோலவே கூந்தலை அடர்த்தியாக்குவதற்கும் சோயா பால் மிகவும் உதவுகிறது.

போல்ட்ஸ்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த கட்டுரையில் சோயா பால் பயன்படுத்தி சொல்லப்பட்டுள்ள இந்த குறிப்புகள் கூந்தலை அடர்த்தியாக்கவும், ஆரோக்கியமாக இருக்கவும் உதவும். செய்வதற்கும் எளிதானது. நேரமும் குறைவு. அந்த ரெசிப்பிகளை படித்து பயன்பெறுங்கள்.

சோயா பால், ஆலிவ் எண்ணெய் :சம அளவு 2 டேபிள் ஸ்பூன் சோயா பால் மற்றும் ஆலிவ் எண்ணெய் எடுத்துக் கொள்ளுங்கள். நன்றாக சேரும்படி கலந்து , பின்னர் அதனை தலையில் குறிப்பாக ஸ்கால்ப்பில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் அப்படியே இருக்கவும். பின்னர் அதனை தலையை அலச வேண்டும். வாரம் 2 நாட்கள் செய்யலாம்.

சோயா பால், முட்டை :2 முட்டையின் வெள்ளைக் கரு எடுத்து அதனுடன் 3 டேபிள் ஸ்பூன் சோயா பாலை கலந்து , தலையில் மாஸ்க் போல் தடவிக் கொள்ளுங்கள். அதனை அப்படியே அரை மணி நேரம் விடவும். பின்னர் தலை முடியை ஷாம்பு கொண்டு அலசலாம். வாரம் இரு நாட்கள் செய்தால் கைமேல் பலன் தரும்.

சோயா பால்+ க்ரீன் டீ :க்ரீன் டி டிகாஷன் எடுத்து அதனுடன் 2 ஸ்பூன் சோயா பாலை கலந்து தலையில் தடவுங்கள். ஒரு மணி நேரம் கழித்து தலைமுடியை அலசுங்கள். இவை கூந்தலுக்கு நல்ல கண்டிஷனராக செயல்புரியும்.

சோயா பால், விளக்கெண்ணெய் :1 ஸ்பூன் விளக்கெண்ணெயில் 2 ஸ்பூன் சோயா பாலை கலந்து நன்றாக சேரும்படி கலக்குங்கள். இந்த கலவையை தலையில் தடவி 1 மணி நேரம் அப்படியே இருக்க வேண்டும். பின்னர் தலையை மைல்ட் ஷாம்பு கொண்டு அலசுங்கள்.

சோயா பால்+ சமையல் சோடா :3 டேபிள் ஸ்பூன் சோயா பாலில் அரை ஸ்பூன் சமையல் சோடாவை கலந்து தலையில் தடவுங்கள். பொடுகினால் உண்டாகும் முடி உதிர்வை தடுக்கிறது. அழுக்கு, கிருமிகள், பூஞ்சைகளிடமிருந்து உங்கள் கூந்தலின் ஆரோக்கியத்தை பாதுகாக்க இந்த குரிப்பு உதவுகிறது.

சோயா பால், நெல்லிக்காய் ஜூஸ் :1 ஸ்பூன் ஃப்ரெஷான நெல்லிகாய் ஜூஸை 2 ஸ்பூன் சோயா பாலை கலந்து நன்றாக சேரும்படி கலக்குங்கள். இந்த கலவையை தலையில் தடவி 1 மணி நேரம் அப்படியே இருக்க வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் தலையை மைல்ட் ஷாம்பு கொண்டு அலசுங்கள்.

சோயா பால் , தேங்காய் எண்ணெய் :1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் 1 ஸ்பூன் சோயா பாலை நன்றாக சேரும்படி கலக்குங்கள். இதனை தலையில் தடவிய பின்னர் தலையை ஷவர் கேப் கொண்டு மூடி விடுங்கள். அப்படியே 1 மணி நேரம் காய விடுங்கள். பின்னர் தலையை மைல்ட் ஷாம்பு கொண்டு அலசுங்கள்.

சோயா பால் , அவகாடோ :அவகாடோவின் சதைபகுதியை எடுத்து அத்னுடன் 2 ஸ்பூன் சோயா பாலை கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை தலையில் தடவி 40-50 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். பின்னர் தலையை மைல்ட் ஷாம்பு கொண்டு அலசுங்கள்.

சோயா பால் , விட்டமின் ஈ :2 விட்டமின் ஈ கேஸ்ப்யூல் 1 ஸ்கூப் எடுத்துக் கொள்லவும், அதனுடன் 2 ஸ்பூன் சோயா பாலை கலந்து நன்றாக சேரும்படி கலக்குங்கள். இந்த கலவையை தலையில் தடவி அரை மணி நேரம் காய வைத்திருங்கள். பின்னர் தலையை மைல்ட் ஷாம்பு கொண்டு அலசவும்.

சோயா பால் மற்றும் வாழைப்பழம் :கனிந்த வாழைப்பழம் ஒன்றை நன்றாக மசித்துக் கொள்லவும். அதனுடன் 2 ஸ்பூன் சோயா பாலை கலந்து நன்றாக சேரும்படி கலக்குங்கள். இந்த கலவையை தலையில் தடவவும். 1 மணி நேரம் கழித்து தலையை மைல்ட் ஷாம்பு கொண்டு அலசுங்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇரண்டே வாரத்தில் 2 இன்ச் இடுப்பளவை குறைக்க‌ இதனைப் பின்பற்றுங்கள்!
Next articleபுற்றுநோய் செல்களை அழிக்கும் ஆயில் இந்த நோய் உள்ளவர்கள் சாப்பிடுவதை தவிர்க்கவும்!