உங்கள் கண்களில் இந்த பிரச்சனைகள் உள்ளதா! உடனே கவனியுங்கள்! இல்லையெனில் பார்வை பாதிக்கும் அபாயம்!

0

கண்தான் பல விஷயங்களுக்கு ஆதாரம். பார்வையில்லாத உலகம் இருண்ட உலகமாகிவிடும். கண்களை நாம் எப்படி கவனிப்பது. சொல்கிறார் மருத்துவர்.

பொதுவாக 4 அல்லது 5 வயதில்தான் குழந்தைகளை கண் மருத்துவரிடம் கூட்டி வருவார்கள். அவ்வளவு காலம் வரை காத்திருப்பது தவறு. குழந்தைப் பிறந்ததும் கண்களில் அல்லது பார்வையில் ஏதாவது வித்தியாசத்தை உணர்ந்தால் உடனே மருத்துவரை அனுவது மிகமிக நல்லது.

சில பிள்ளைகளுக்கு சிறு வயதிலேயே கண்களில் நீர் வடியும். அது ஒருவிதமான ஒவ்வாமை. அப்படி இருந்தால் மருத்துவரை அனுகுவது அவசியம். அதற்கு சில விரல் மசாஜ் வகைகள் உண்டு. அதை அன்றாடம் செய்வதால் இதைக் குணப்படுத்திவிடலாம்.

சத்தான உணவுகளை குழந்தைகளுக்கு சிறுவயது முதலே கொடுக்க வேண்டும். கீரை, முட்டை போன்ற உணவுபொருட்களை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளவது அவசியம்.

பிறந்தக் குழந்தையின் ‘கண் அசைவு’ மூன்று மாதங்களில் தொடங்கிவிடும். அவ்வாறு இல்லை எனில் ஏதோ பிரச்னை இருப்பதாக எடுத்துக் கொண்டு சிகிச்சைக்கு செல்வது நல்லது.

குழந்தைகளுக்கு மாறுகண் பிரச்னை இருப்பதாக உணர்ந்தால் உடனே ஆலோசனைப் பெற வேண்டும். பலருக்கு கண் கண்ணாடியே போதும். சிலருக்கு அவசியம் இருப்பின் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரலாம்.

நவீன தொழில்நுட்ப காலத்தில் சிறு வயதிலேயே பிள்ளைகள் ஐ பேட், கம்ப்யூட்டர்களில் கேம்ஸ் ஆடுவதில் மும்முரமாக இருக்கிறார்கள். கண்களை இமைக்காமல் ஆர்வ மிகுதியில் அதிக நேரம் விளையாடுவதால் கண்களில் ஈரப்பதம் குறைந்துப் போகும். அதனால் பிரச்னைகள் வரலாம்.

ஐடி துறைகளில் இருவர்கள் இந்தக் குறைபாடுகளால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. இதற்கு என தனியே ஜெல் கிடைக்கிறது. மருத்துவரின் பரிந்துரையை ஏற்று அதனைப் பயன்படுத்துவது நல்லது.

பிரச்சனை உள்ளதோ, இல்லையோ வருடத்திற்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

கர்ப்பமாக இருக்கும் தாய்மார்கள் சில மருந்துகளை உட்கொள்ளக்கூடாது. அதனால் சில பக்க விளைவுகள் குழந்தைக்கு வரலாம். மருத்தவர் அனுமதியில்லாமல் ஒரு மருந்தையும் சாப்பிடக் கூடாது.

நாற்பது வயதுக்குப் பின் கண் பரிசோதனைக் கட்டாயம். ரத்த அழுத்தம், நீரிழிவு பிரச்னைகளால் கண் பாதிப்பு வரக்கூடும். ‘குலோக்கோமா’ என்பது ஹை பிரஷர். இதை மருத்துவ வார்த்தையில் ‘சைலண்ட் தீஃப்’ என்போம். இதனால் திடீரென்று பார்வை போககூடும். எந்தவித அறிகுறிகளும் இல்லாமலே இந்தப் பிரச்னை வரலாம்.

குழந்தைகளுக்கு மாறுகண் பிரச்னை இருப்பதாக உணர்ந்தால் உடனே ஆலோசனைப் பெற வேண்டும். பலருக்கு கண் கண்ணாடியே போதும். சிலருக்கு அவசியம் இருப்பின் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரலாம்.

நவீன தொழில்நுட்ப காலத்தில் சிறு வயதிலேயே பிள்ளைகள் ஐ பேட், கம்ப்யூட்டர்களில் கேம்ஸ் ஆடுவதில் மும்முரமாக இருக்கிறார்கள். கண்களை இமைக்காமல் ஆர்வ மிகுதியில் அதிக நேரம் விளையாடுவதால் கண்களில் ஈரப்பதம் குறைந்துப் போகும். அதனால் பிரச்னைகள் வரலாம்.

ஐடி துறைகளில் இருவர்கள் இந்தக் குறைபாடுகளால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. இதற்கு என தனியே ஜெல் கிடைக்கிறது. மருத்துவரின் பரிந்துரையை ஏற்று அதனைப் பயன்படுத்துவது நல்லது.

கண்களில் புரை விழுந்திருப்பதாக தெரிய வந்தால் முதலிலேயே சிகிச்சைக்கு செல்ல வேண்டும்.
பார்வையில் வெளிச்சப்புள்ளிகள் மிளிர்வதை போல இருந்தாலும் கண் சம்பந்தமான பிரச்னைகள் இருப்பதாக அர்த்தம்.

சூரிய வெளிச்சத்தில் இருந்து கண்களைக் காக்க கூலிங் கிளாஸ் போடலாம். யூவி புரடெக்ஷன் கண்ணாடிகளை பயன்படுத்துவது நல்லது.

கண்களில் மை இடுவதால்கூட கண்ணுக்கு அலர்ஜி வரலாம். காண்டாக்ட் லென்ஸ் போடுவதால் கூட சில ஒவ்வாமைகள் வர கூடும். அதற்கு என்று சில சொட்டு மருந்துகள் உண்டு. அதை பயன்படுத்தலாம்.

சிறுவர்கள் ‘பாலி கார்பநேட்’கண்ணாடிகளை பயன்படுத்துவது நல்லது. தூரப்பார்வை உள்ளவர்கள் சின்ன ஃப்ரேம் பயன்படுத்தலாம். மற்றவர்களுக்கு வேறு வகை ஃப்ரேம்கள் நல்லது.
கண் சிவப்பாக இருப்பதுகூட அலர்ஜி சம்பந்தமானதுதான். இது நார்மல் பிரச்னைதான்.

வண்டிகளில் அதிக தூரம் பயணம் செய்வதால்கூட இப்படி நேரலாம். இதற்கும் சொட்டு மருந்துகள் உண்டு.

சிலருக்கு அடிக்கடி கண்களில் அழுக்கு சேர்ந்துக் கொண்டே இருக்கும். கண்களில் கண்ணீரை சேமிக்கக்கூடிய பைகள் உள்ளது. அதில் ஏதாவது பிரச்னை வந்தால் நீர் வடியும். ஊளை சேரும். ஆரம்பக்கட்டத்தில் மருத்து மூலமே இந்த ஒவ்வாமையை நீக்கிவிடலாம். அவசியம் எனில் அதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வது நல்லது.

அடிக்கடி கண்களில் கைகளை வைத்து தேய்ப்பது கூடாது. அப்படி செய்தால் அந்த சூட்டினால் கொப்புளங்கள் உருவாகும். கண்களில் வறட்சி ஏற்படும். ஆகவே கண்களை தேய்ப்பது கெடுதல்.

கண் பிரச்னைக்கு பெட்டிக்கடைகளில் கிடைக்கும் டியூப் ஆயில்மெண்ட்டுகளை வாங்கி போடவே கூடாது.

தானத்தில் சிறந்தது கண் தானம். அவசியம் அதை செய்து உலகை ஒளி ஊட்டலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதாம்பத்தியத்தில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! இந்த பழங்களை சாப்பிட்டு வாருங்கள்!
Next articleஇந்தியாவில் முதல் முறை பல தடைகளைத் தாண்டி சாதித்த திருநங்கை மருந்தாளர்! பின்னணியில் இவ்வளவு சோகமா!