உங்கள் உதடு வறட்சியாக இருக்கிறதா? அதை போக்க எளிய இயற்கை வழிகள்!

0

பெண்களின் அழகை எடுத்து காட்டுவதில் உதடு முக்கிய பங்கு வகிக்கிறது.குளிர்காலம் வந்தாலே உங்கள் சருமமும் தலைமுடியும் உதடுகளும் வறண்டு காணப்படும். இவற்றை பராமரிக்க நாம் கடைகளில் கிடைக்கும் கிரீம்களையும், லோஷன்களையும், ஷாம்புக்களையும், லிப் பாம்களையும் வாங்க வேண்டிவரும். இவற்றில் உள்ள இரசாயனப் பொருட்கள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அதனால், எளிய முறையில் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே நமது உதட்டினை பராமரிக்கலாம்.

நமது உதடுகளில் வறட்சி ஏற்படுவதற்கு, அல்ல‍து அடிக்கடி காய்ந்து போவதற்கு நமது உடலின் வெப்ப‍நிலை உயர்ந்து விட்ட‍தன் அறிகுறியே இதுவாகும்,

தினமும் இரவில் படுக்கும் முன் உதடுகளில் வெண்ணெயை தடவி வந்தால் உதடுகளும் தானாக வறண்டு போகாது, அல்ல‍து காய்ந்து போகாது. உதட்டை நாவினால் வருடி ஈரமாக்குவதை விட உஷ்ணத்தைக் குறைக்கும் மோரை அடிக்கடி நாம் பருகி வர வேண்டும்.

தேங்காய் எண்ணெய் வெடித்த உதடுகளை சரிசெய்வதற்கு சிறந்ததாகும். இந்த எண்ணெய் உங்கள் உதடுகள் வறண்டு போவதை குறைத்து உதடுகளுக்கு தேவையான ஈரப்பதத்தை அளிக்கும்.

மேலும் தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் உங்கள் உதடுகளுக்கு தேவையான ஈரப்பதத்தை அளிக்கும். இரவு நேரங்களிலும் அல்லது பகல் நேரங்களிலும் தொடர்ந்து உபயோகிக்கலாம். உங்கள் உதடுகளுக்கு மிகுந்த பலனை அளிக்கும். மேலும் வறண்ட குளிர்ந்த காற்றிலிருந்து உங்கள் உதடுகளை பாதுகாக்கும்.

மற்றும் குளிா்ச்சியான பழ‌ங்கள் காய்கறிகள் என உணவில் சோ்த்துக்கொண்டால் நன்மை தரும்,
இவற்றின் காரணமாக நமது உடலில் ஏற்பட்டுள்ள‍ உஷ்ணம் குறையும், உதடுகளும் தானாகவே வறண்டு போகாது, அல்ல‍து காய்ந்து போகாது.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசிபலன் 26.5.2018 சனிக்கிழமை!
Next articleஇருதயநோய் வருவதை தடுக்க தினமும் 375 கிராம் காய்கறி பழங்கள் சாப்பிடுங்கள்! ஆய்வில் புதிய தகவல்!