உங்களின் முகம் உங்களை பற்றி என்ன சொல்கிறதுனு தெரியுமா! இத படிச்சா தெரிஞ்சிக்கலாம் வாங்க!

0

இந்த பூமியில் பல வித உயிரினங்கள் உள்ளன. அதில் மனித இனம் சற்றே வித்தியாசமானது. ஒவ்வொரு மனிதனும் வெவ்வேறு தன்மைகளை கொண்டவர்கள். அதே போன்று ஒவ்வொருவரும் மனிதனும் பலவித முக தோற்றத்துடனும் குண வேறுபாடுடனும் இருப்பார்கள்.

ஆனால், நமது முகத்தில் ஏற்படுகின்ற சில முக்கிய வேறுபாடுகளை வைத்து நம்மை பற்றி சொல்ல முடியுமா..? என்பது ஆச்சரியத்திற்கு உரிய கேள்வியாக உள்ளது தான். இது சாத்தியம் என்பதுதான் உண்மை. எப்படி என்பதை இந்த பதிவில் முழுமையாக படித்து தெரிந்து கொள்வோம்.

முகம் சொல்லும் அறிவியல்!
நமது முகம் நம்மை பற்றிய தெளிவான விவரத்தை கூறும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக நமது முகத்திற்கும் நமது ஆரோக்கியத்திற்கும் ஒரு பெரிய இணைப்பு உள்ளதாம். உடலில் ஏற்படுகின்ற ஒவ்வொரு மாற்றத்தையும் இந்த முக மாற்றங்கள் என்னவென்று கூறி விடுமாம்.

சிவந்த மூக்கு!
சிலருக்கு மூக்கு பகுதியில் ஏதேனும் சிறு அடிபட்டால் கூட செக்க சிவப்பாக மாறி விடும். ஆனால், எந்த காரணமும் இன்றி உங்களின் மூக்கு சிவக்க தொடங்கினால் அது ரத்த நாளங்களில் ஏதோ பிரச்சினை உள்ளது என அர்த்தமாம். குறிப்பாக மன அழுத்தம், தட்பவெப்ப மாற்றங்கள், அலர்ஜி ஆகிய அறிகுறிகளும் உடலில் இருந்தால் இது போன்று ஏற்படலாம்.

புருவம் மெல்லிதானால்!
முன்பெல்லாம் உங்களின் புருவம் அதிக அடர்த்தியாகவும், கருமையாகவும் இருந்து, இப்போது மெல்லிசாக மாறி விட்டதா..? இதற்கு காரணம் தைராய்டு சுரப்பியில் கோளாறு உள்ளது என்று அர்த்தம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், இந்த பிரச்சினை இருந்தால் உடல் எடை கூடுதல், சரும வறட்சி போன்றவை ஏற்படுத்துமாம்.

எதிர்க்கு சக்தி குறையுமா!
மூக்கின் பகுதியிலும், உதடுகளிலும் புண் அல்லது சிரங்கு போன்று ஏற்பட்டால் அதற்கு type 1 herpes virus தான் காரணமாக இருக்கும். இவை உங்களின் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை பலவீனப்படுத்தி விடுமாம். எனவே, இதனால் உடல் சோர்வு, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளும் உண்டாகும்.

மச்சம்!
முகத்தில் திடீரென்று மச்சம் தோன்றினால் அதற்கு பலவித அர்த்தங்கள் உள்ளன. சில நாட்கள் இதே போன்று பல மச்சங்கள் ஏற்பட்டால் அதற்கு நோய்கள் கூட காரணமாக இருக்கலாம். மேலும், இது போன்ற நிலையில் அதிக நேரம் வெயிலில் இருக்க வேண்டியதில்லை.

தாடை பகுதியில் தேமல்!
சிறு சிறு தேமல்கள் சிலருக்கு உடலில் வர தொடங்கும். அதிக வேதி பொருட்களை பயன்படுத்துதல், காலநிலை மாற்றம், அதிக அளவில் இனிப்பு உணவுகளை சாப்பிடுதல் போன்ற காரணிகளால் இது ஏற்படலாம். முகத்தில் தாடை பகுதியில் பெரிய அளவில் தேமல் இருந்தால் சாதாரணமாக எடுத்து கொள்ளாமல் மருத்துவரை அணுகுங்கள்.

மஞ்சள்!
முகம் பார்ப்பதற்கு வெளீரென்ற மஞ்சள் நிறத்தில் உள்ளது என்றால், அதற்கு இரு வகையான காரணிகள் உள்ளது. கல்லீரல் நோய்கள் உங்களுக்கு உள்ளதை இவை குறிக்கிறது. மேலும், மஞ்சள் காமாலை இருப்பதற்கான அறிகுறியாக கூட இருக்கலாம்.

மூக்கு மற்றும் உதடுகளில் தோல் உரிதல்!
உடலில் தோல் உரிதல் சாதாரணன் ஒரு நிகழ்வு தான். ஆனால், மூக்கு மற்றும் உதடுகளில் இது போன்று தோல் உரிதல் ஏற்பட்டால் ஊட்டசத்து குறைபாடு என்று அர்த்தம். வைட்டமின் எ,சி, ஈ, பி போன்ற வைட்டமின்கள் குறைவாக உள்ளது என்று அர்த்தமாம்.

கருவளையங்கள்
கண்களை சுற்றி கருமையான வளையங்கள் ஏற்பட்டால் அதற்கு பலவித காரணிகளை நாம் சொல்லலாம். ஹார்மோன் குறைபாடு, தூக்கமின்மை, புகை பழக்கம் ஆகிய பிரச்சினைகளால் இவை ஏற்படலாம். மேலும், இதனால் மன சோர்வு, மன அழுத்தம், கவனமின்மை போன்ற பிரச்சினைகளையும் தர வல்லது.

முடி வளர்தல்!
முகத்தில் எல்லா பகுதியிலும் முடி வளர்ச்சி இருந்தால் பெண்களுக்கு கருத்தரிப்பில் பிரச்சினை உண்டாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதிகமாக உணவில் சர்க்கரையை சேர்த்து கொண்டாலும் இந்த நிலை ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாம். எனவே, இது போன்று இருந்தால் மருத்துவரை அணுகுங்கள். இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் உங்களின் அன்பிற்குரியவர்களுக்கும் பகிருங்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇந்த மூனுல உங்க பாதம் எப்படினு சொல்லுங்க! நீங்க எப்படினு நாங்க சொல்றோம்!
Next articleநியூசிலாந்தில் 49 பேரை பலி கொண்ட தாக்குதல்! சரமாரியான சூட்டு சம்பவம்! சிரித்துக் கொண்டே வீடியோ எடுத்த கொலையாளி!