எச்சரிக்கை தகவல்! காதுகளில் இருந்து வெளியேறும் அழுக்குகள் மஞ்சள் நிறத்தில் இருக்கிறதா!

0

நமது காதுகளுக்குள் பாக்டீரியா மற்றும் அழுக்குகள் சேர்ந்து விடாமல், அவற்றை உடல் இயற்கையாக வெளியில் தள்ளி அது காதுக்குரும்பியாக வெளிவருகிறது.

இதை செருமென் (Cerumen) என்று கூறுவார்கள். இது காதைச் சுத்தமாக்குவதோடு, காது அரிப்பிலிருந்தும் நம்மை பாதுகாக்கிறது.

ஆனால் நமது காதில் இருந்து வெளியேற்றப்படும் அழுக்குகள் இருக்கும் நிறங்கள் ஒருசில அறிகுறிகளை கூறுகிறது என்று உங்களுக்கு தெரியுமா?

ஈரமான மஞ்சள்

ஈரமான மஞ்சள் நிறமுள்ள அழுக்குகள் அனைவரிடமும் காணப்படுகிற நிறம் தான். இதனால் பாதிப்புகள் ஒன்றுமில்லை. ஏனெனில் இது, வறண்டுவிடாமலும், அரிப்பு ஏற்படாமலும் இருக்க உதவுகிறது.

சாம்பல்

காதை சுத்தம் செய்யும் போது, சாம்பல் நிறத்தில் இருந்தால், எந்தவித பாதிப்புகளும் இல்லை. ஆனால் அது வறண்டு, அரிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் அது எக்ஸீமா (Eczema) என்ற தோல் நோயின் அறிகுறியாக கூட இருக்கலாம்.

வெளிர் மஞ்சள்

வெளிர் மஞ்சள் நிறமுள்ள அழுக்கானது குழந்தைகளிடம் தான் அதிகமாகக் காணப்படும். இது போன்றவை குழந்தைகளுக்குப் பெரியவர்களை விட அதிகமாக இருக்கும். ஆனால் குழந்தைகள் வளர வளர அதன் அளவும் குறையும்.

பிசுபிசுப்பான அடர் மஞ்சள்

அடர் மஞ்சள் நிறத்தில் பிசுபிசுப்பாக இருந்தால், அது உங்கள் உடல் அதிகமாக வியர்ப்பதாக அர்த்தமாகுமாம். இது உடல் துர்நாற்றத்துக்கும் காரணமாக அமையலாம். ஆனால் எந்தப் பாதிப்புகளும் இல்லை.

தடித்த அடர் மஞ்சள்

ஒரு பரப்பரப்பான சூழலில் நாம் பயத்தோடு இருக்கும் போது, அடர் மஞ்சள் நிறத்தில் உள்ள குரும்பி அதிகமாகச் சுரக்கும். இது தற்காலிக காது கேளாமை பாதிப்பை ஏற்படுத்துமாம்.

வறண்ட வெள்ளை

வறண்ட வெள்ளை நிறத்தில் இருக்கும் காதுக்குரும்பியால் ஒரு பிரச்னையும் இல்லை. அதனால் உடலில் துர்நாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் குறைவு.

கறுப்பு அல்லது அடர் பழுப்பு

காதில் அதிக நாள்கள் வெளியேறாமல் தங்கி இருக்கும் போது, இது கறுப்பு நிறமாக மாறிவிடும். ஆனால் இதனால் எந்த பாதிப்புகளும் இல்லை.

நீர்போல வழிதல்

காதின் செவி வழியாக நீர்போல வழிய ஆரம்பித்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் அது செவிப்பறைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பைக் குறிக்கும்.

ரத்தத்துடன் கூடிய காதுக்குரும்பி

ரத்தத்துடன் காதுக்குரும்பி வெளியேறினால், அது செவிப்பறைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் குறிக்கும். எனவே உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.

காதுக் குரும்பி பிரச்சனைக்கு என்ன செய்யலாம்?

குளிக்கும்போது தண்ணீர், சோப், ஷாம்பூ ஆகியவற்றை செவிப்பறைக்கு அருகே கொண்டு செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

எப்போதும் காதுகளை ஈரப்பதமின்றி வறண்ட நிலையில் வைத்திருக்க வேண்டும்.

குளித்து முடித்தவுடன் துண்டின் நுனிப்பகுதியால், காதில் படிந்திருக்கும் தண்ணீரை துடைக்க வேண்டும்.

காதில் உள்ள அழுக்கை நீக்கும் பஞ்சுக் குச்சிகளை (Ear cleaning buds) தேவையில்லாமல், அடிக்கடி பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

செவிகளில் சீழ் வடிதல், ரத்தம் வருதல், வித்தியாசமாக சத்தம் எழுதல், காது அடைப்பது போன்ற உணர்வு ஆகியவை இருக்கும் போது, மருத்துவரை அணுக வேண்டும்.

காதில் உள்ள அழுக்கை நீக்குவது எப்படி?

காதுகளில் உள்ள அழுக்குகளை அவ்வப்போது வெளியேற்றுவது நல்லது. எனவே அதற்காக காதுகளுக்குள் சுண்டு விரல்களை வைத்துக் கொண்டு, வெறும் வாயை மெல்வது போல செய்தால், காதுகளிலில் இருந்து அழுக்குகள் தானாக வெளியேறும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇறந்தவர்கள் உங்களது கனவில் அடிக்கடி வருகிறார்களா! அந்த அதிர்ஷ்டத்தை தெரிஞ்சிக்கோங்க!
Next articleஎந்த நேரத்திலும் நாட்டை தாக்கவுள்ள ஆபத்து!