இலங்கை வரும் வெளிநாட்டு பெண்களுக்கு ஆபத்து!

0

இலங்கை வரும் வெளிநாட்டு பெண் மீது பாலியல் வன்கொடுமைகள் தீவிரமாக அரங்கேற்றப்படுவதாக பிரித்தானிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கையின் மிரிஸ்ஸ பகுதியில் சுற்றுலா பயணம் மேற்கொண்ட இரு வெளிநாட்டு பெண்கள் மீது பாலியல் துஷ்பிரயோக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்தை தடுத்து நிறுத்த முயற்சித்த நெதர்லாந்து நாட்டு சுற்றுலா பயணி ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் கடந்த ஞாயிற்று கிழமை இடம்பெற்றுள்ளதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

நெதர்லாந்தை சேர்ந்த இளைஞர் ஒருவரும் இரண்டு பிரித்தானிய பெண்களும் மிரிஸ்ஸ பகுதியில் உள்ள விடுதியில் இரவு உணவு பெற்றுக் கொண்டுள்ளனர்.

அந்த விடுதியில் பணியாற்றியவர், இரண்டு பிரித்தானிய பெண்களிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த விடுதியில் வேலை செய்தவர்கள் எங்கள் அருகில் ஆட முயற்சித்ததுடன், எங்கள் தூக்க முயற்சித்தனர் என பிரித்தானிய பெண் ஒருவர் ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளார்.

இரவு நேர கேளிக்கை நிகழ்ச்சிகளின் போது மேலும் பல இலங்கை இளைஞர்கள் இணைந்து பிரித்தானிய பெண்களிடம் அங்க சேட்டையில் ஈடுபட்டதாக 19 வயதான டச்சு நாட்டவர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் இது தொடர்பில் விடுதியில் பணியாற்றுபவர்களிடம் முறைப்பாடு செய்தோம். அவர்கள் எங்களை பார்த்து சிரித்து மேலும் தவறாக நடந்து கொண்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் அங்கிருந்து செல்ல முயற்சித்த போது இலங்கை இளைஞன் ஒருவன் பெண்களிடம் மிக மோசமாக நடந்து கொண்டுள்ளார்.

கோபமடைந்த சுற்றுலா பயணிகள் அங்கிருந்து செல்ல தீர்மானித்த போதிலும், இலங்கை இளைஞர்கள் அவர்களை பின் தொடர ஆரம்பித்துள்ளனர்.

அத்துடன் நெதர்லாந்து இளைஞனை 10 நிமிடங்களாக இலங்கை இளைஞர்கள் தாக்கியுள்ளனர். இதனால் அந்த இளைஞன் படுகாயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்நிலையில் இலங்கையின் சுற்றுலா தளங்களில், வெளிநாட்டு பெண்கள் கடுமையாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளதாகுவதாகவும், இந்த நிலைமை தொடர்வதாகவும், நெதர்லாந்து சுற்றுலா அமைச்சு எச்சரித்துள்ளது.

இலங்கை செல்லும் சுற்றுலா பயணிகள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும், கடல் அருகில் உள்ள விடுதிகளில் தங்குவதில் கவனம் தேவை எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை செல்லும் வெளிநாட்டு பெண்கள் தனியாக செல்வதனை தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article15-வயது கனடிய பெண்ணிற்கு கிடைத்த அதிஷ்டம்!
Next articleஇன்றைய ராசிபலன் 15.4.2018!