இருமலை குணப்படுத்த வைத்திய குறிப்புகள்!

0
1112

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலக்காய் ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு, இருமல் குணமாகும்.
மிளகை தூள் செய்து, சம அளவு பனைவெல்லம் கலந்து சுண்டைக்காய் அளவு ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட, சூட்டினால் உண்டாகும் இருமல் குணமாகும்.
விஷ்ணு கிரந்தி பொடியை வெந்நீரில் கலந்து குடிக்க இருமல் குணமாகும்.
எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேனை கலந்து குடிக்க வறட்டு இருமல் குணமாகும்.

இரவு வேளையில் மிளகு, மஞ்சள் கலந்த பாலை அருந்தி வந்தால் சளியும் இருமலும் பறந்தோடி விடும். இதனை குறைந்தது ஒரு வாரத்திற்கு பயன்படுத்த வேண்டும்.
மாதுளம் பழத்துடன் பாதாம் எண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் இருமல் குறையும்.
துளசிப்பூ, திப்பிலி, வசம்புப் பொடி இவைகளில் சர்க்கரை மற்றும் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வர இருமல் குறையும்.
பாலுடன் கிராம்புப் பொடி மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து காய்ச்சி சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குறையும்.

தேனுடன் அதே அளவு இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
தேனுடன் சிறிது மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.
சீரகத்தையும் கற்கண்டையும் மென்று தின்றால் இருமல் குணமாகும்.
நான்கு மிளகையும், இரு கிராம்பையும் நெய்யில் வறுத்து பொடி செய்து ஒரு வெற்றிலையில் மடித்து மென்று விழுங்கினால் இருமல் குணமாகும்.

Previous articleபற்களை ஆரோக்கியமாக வைக்க சில குறிப்புகள்.
Next articleகுரு பெயர்ச்சி பலன் 2018 – 2019 ரிஷபம்!