மஞ்சள் மற்றும் மிளகை ஒன்றாக சேர்த்து சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? வியப்பான தகவல்!

0

மஞ்சள் மற்றும் மிளகை ஒன்றாக சேர்த்து சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

இயற்கை நமக்கு அளித்துள்ள பல ஆரோக்கியமான உணவு பொருட்களில் மசாலா பொருட்களின் அரசன் என்று அழைக்கப்படும் மஞ்சள் மிகவும் முக்கியத்துவம் அதன் பாக்டீரியா மற்றும் வைரஸ் எதிர்ப்பு குணங்கள் மற்றும் ஏனைய மருத்துவ குணங்களுக்காக பழங்காலம் முதலே பல சிகிச்சைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றதுடன், தற்போதும் பல்வேறுபட்ட ஆயுர்வேத சிகிச்சைகளில்; பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதேபோல மற்றோரு மருத்துவ பொருளாகிய மிளகு மஞ்சளுடன் இணையும்போது அது ஆரோக்கியத்தில் பலதரப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்.

வீக்கத்தை குறைக்கும்

பல நூறு ஆண்டுகளாக மஞ்சள் மற்றும் மிளகு இரண்டும் ஆயுர்வேதத்தில் வீக்கத்தை குறைக்கவும், மூட்டுவலி போன்ற பிரச்சினைகளை குணப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

மனஅழுத்தத்தை குறைக்கும்

மஞ்சள் மற்றும் மிளகு ஆகிய இரண்டு மசாலா பொருட்களிலுமே மனஅழுத்தத்தை எதிர்க்கும் பண்பு காணப்படுவதனால் இவை இரண்டையும் ஒன்றாக சாப்பிடும் போது மனஅழுத்தத்தை குறைக்கும் செரோடோனின் ஹார்மோனின் சுரப்பு அதிகரிப்பதுடன், மகிழ்ச்சியை அதிகரிக்கும் ஹார்மோனான டோபோமைனின் சுரப்பும் அதிகரிக்கின்றது.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்

பல்வேறுபட்ட ஆய்வுகளின் படி மஞ்சளில் உள்ள குர்குமின் மற்றும் மிளகில் உள்ள பைபரின் என்பன இரத்த நாளங்களின் மீது உண்டாகும் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைப்பதுடன், மஞ்சள் மற்றும் மிளகு சேர்த்து சாப்பிடும் போது சர்க்கரை நோய் கட்டுப்படுத்தப்படும்.

சரும ஆரோக்கியம்

மிளகு மற்றும் மஞ்சள் கலந்த கலவையில் அதிக அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி ஆக்சிடண்ட்கள் உள்ளதனர், சருமத்தில் ஏற்படும் கொப்புளங்களை குணப்படுத்துவதோடு சருமத்தையும் பொலிவுற செய்து சருமத்தில் ஏற்படும் பல்வேறுபட்ட பாதிப்புகளையும் குணப்படுத்துகின்றது.

ஈரலை பாதுகாக்கும்

மஞ்சளில் இருக்கும் குர்குமின் ஈரல் செல்களை சேதப்படுத்தும் நச்சுப்பொருட்களை வெளியேற்றுகின்ற அதேவேளை மிளகில் உள்ள குளுதாதயோனின் ஈரலின் ஆரோக்கியத்தை அதிகரித்து ஈரலில் உள்ள செல்களின் சமநிலையை பரமரிக்கின்றது.

நினைவாற்றலை அதிகரிக்கும்

மஞ்சள் மற்றும் மிளகு இரண்டிலும் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட் பண்புகள் உங்களின் நினைவாற்றலை அதிகரிக்க உதவும். இது உங்கள் மூளையில் ஏற்படும் டிமென்ஷியா மற்றும் அல்சைமர் போன்ற நோய்கள் ஏற்படும் வாய்ப்புகளை குறைக்கிறது. மேலும், இது நினைவாற்றலை ஊக்குவிக்கவும் உதவும்.

உடல்பருமனை குறைக்கும்

மஞ்சளுடன் மிளகு மற்றும் இஞ்சி சேர்த்து சூடான நீரில் கலந்து தினமும் காலையில் குடித்து வரும் போது உடலில் உள்ள கூடுதல் கொழுப்புகளை குறைவதோடு, உடலின் வளர்ச்சிதை மாற்றத்தையும் ஊக்குவித்து, உடல் பருமனை குறைக்கவும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றது.

வலியை குறைக்கும்

மஞ்சளின் தீவிர குணப்படுத்தும் தன்மையால் காயங்கள் மற்றும் வலிகளை குணப்படுத்தும் ஒரு சிறந்த பொருளாக காணப்படுகின்ற அதேவேளை, மஞ்சளுடன் மிளகு சேரும்போது அது எலும்புகளில் ஏற்படும் வலியை குறைப்பதுடன், ஆர்திரிடிஸ் போன்ற பிரச்சினைகளையும் நீக்குகின்றது.

புற்றுநோயை தடுக்கும்

மஞ்சளில் உள்ள குர்குமின் உடலில் உள்ள புற்றுநோய் செல்களை அழிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிற வகையில், மஞ்சள் மற்றும் மிளகு ஆகியவற்றின் சரியான கலவை மார்பக புற்றுநோய் செல்கள், பெருங்குடல் புற்றுநோய் செல்கள் மற்றும் லுக்கேமியா புற்றுநோய் செல்கள் போன்றவற்றை அழிக்க பயன்படுத்தப்படுகின்றது.

செரிமானம்

மஞ்சள் மற்றும் மிளகு என்பன குடலில் உள்ள நொதிகளின் செரிக்கும் தன்மையை அதிகரித்து உணவு செரிமானம் அடைய எடுக்கும் நேரத்தைக் குறைக்கின்றதுடன், இதிலுள்ள எதிர் அழற்சி பண்புகள் குடலில் ஏற்படும் வீக்கங்களையும் குறைக்க உதவுகின்றன.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபடுக்கையறையில் சாமி படங்களை மாட்டி வைப்பது சரியா?
Next article2019-ல் உங்க ராசிக்கு மிகவும் மோசமான மாதம் எது தெரியுமா? மிகவும் கவனமாக இருங்கள்!