இப்படியானவர்கள் பப்பாளி சாப்பிடக்கூடாது! சாப்பிட்டால் ஆபத்து!

0

அனைத்து காலங்களிலும் விலைக் குறைவில் கிடைக்கும் ஓர் பழம் தான் பப்பாளி. பப்பாளி சுவையானது மட்டுமின்றி, ஆரோக்கியமானதும் கூட. 100 கிராம் பப்பாளியில் 43 கலோரிகள் மற்றும் அன்றாடம் வேண்டியதில் 75% வைட்டமின் சி மற்றும் 10 % ஃபோலேட் உள்ளது.

பப்பாளியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் இதர அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இருப்பினும் இந்த பழத்தைக் குறிப்பிட்ட மக்கள் சாப்பிடக்கூடாது.

உங்களுக்கு யாரெல்லாம் பப்பாளிப் பழத்தை சாப்பிடக்கூடாது என்று தெரியாதா? சாப்பிட்டால் உயிருக்கு கூட ஆபத்து ஏற்படலாம். அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள்

கர்ப்பிணிகள்

கர்ப்பிணிகள் பச்சையாக இருக்கும் பப்பாளியை சாப்பிடக்கூடாது. இது கருச்சிதைவை உண்டாக்கும். பச்சை பப்பாளியில் லாடெக்ஸ் என்னும் கருப்பையை சுருக்கும் உட்பொருள் உள்ளது. ஆகவே கர்ப்ப காலத்தில் இந்த பழத்தை சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும்.

சுவாச பிரச்சனைகள்

பப்பாளியில் உள்ள பாப்பைன் என்னும் நொதிப் பொருள், சுவாச பிரச்சனைகள் இருப்போரது நிலையை தீவிரமாக்கும். ஆகவே ஆஸ்துமா உள்ளவர்கள், இந்த பழத்தை சாப்பிடாமல் இருப்பது நல்லது.

சிறுநீரக கற்கள்

பப்பாளியில் ஏராளமான அளவில் வைட்டமின் சி உள்ளது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலுவற்ற தன்மையைப் பராமரிப்பதில் முக்கிய பங்கை வகிக்கிறது. இருப்பினும் அளவுக்கு மிஞ்சினால், எதுவும் தீங்கை தான் உண்டாக்கும். அதில் பப்பாளி மட்டும் விதிவிலக்கல்ல. பப்பாளியை அதிகளவில் உட்கொண்டால், அதில் உள்ள வைட்டமின் சி சிறுநீரக கற்களை உருவாக்கும்.

ஆண்களின் கருவளம்

பப்பாளியை அதிகளவில் பப்பாளியை உட்கொண்டால், அது வலுவான இனப்பெருக்கத் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் விந்தணுவின் எண்ணிக்கையைக் குறைக்கும். ஆகவே தந்தையாக நினைக்கும் ஆண்கள், பப்பாளி உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.

இரைப்பை குடல் பிரச்சனைகள்

அளவுக்கு அதிகமாக பப்பாளியை உட்கொண்டால், அது இரைப்பைக் குடல் பிரச்சனைகளை உண்டாக்கும். அதே சமயம் அதில் உள்ள பாப்பைன் அதிகளவு வயிற்றினுள் செல்லும் போது, அது வயிற்று உப்புசத்தை உண்டாக்கும். ஆகவே இரைப்பை குடல் பிரச்சனை உள்ளவர்கள், இப்பழத்தை தவிர்ப்பதோடு, மற்றவர்கள் அளவாக சாப்பிடுவதே நல்லது.

சரும பிரச்சனைகள்

சருமத்தின் நிறம் ஏற்கனவே மாற்றமடைந்து, அதுவும் வெளிரிய மஞ்சள் நிறத்தில் உள்ளங்கை இருந்தால், கரோட்டினீமியா என்னும் சரும நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தம். அதுவும் இந்த நோய் அதிகளவு பப்பாளியை உட்கொண்டால் வரக்கூடியதாகும்.

எப்படியெனில் அளவுக்கு அதிகமாக பீட்டா-கரோட்டினை உட்கொள்வதால் ஏற்படும் பிரச்சனை தான் இது. குறைவான இரத்த சர்க்கரை நன்கு நொதிக்கப்பட்ட பப்பாளி இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும்.

பப்பாளியை ஒருவர் இந்நிலையில் எடுத்தால், இரத்த சர்க்கரை அளவு குறையும். அதுவும் ஏற்கனவே குறைவான இரத்த சர்க்கரை உள்ளவர்கள் உட்கொள்வது மிகவும் ஆபத்தானது. ஆகவே கவனமாக இருங்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅல்சர் நோயினால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த‌ தீர்வு தரும் நாட்டு மருந்து!
Next articleகற்பூரத்தை பயன்படுத்தி கை கால் முட்டிகளில் இருக்கும் கருமையை போக்குவது எப்படி! இன்னும் பல டிப்ஸ்!