இன்றைய ராசிபலன் 4.6.2018 திங்கட்கிழமை !

0

இன்றைய ராசிபலன் 4.6.2018 திங்கட்கிழமை !

4.6.2018 திங்கட்கிழமை விளம்பி வருடம் வைகாசி மாதம் 21-ம் நாள்.
சஷ்டி திதி முழுவதும். பிறகு திருவோணம் நட்சத்திரம் மதியம் 1.27 வரை பிறகு அவிட்டம் நட்சத்திரம். யோகம்: அமிர்த-சித்த யோகம்.
குளிகை: 1:30 – 3:00
சூலம்: கிழக்கு.
பொது: வாஸ்து நாள். (காலை.10.06 காலை 10.42) கீழ் திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நதியில் கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. சிரவண விரதம். தருமை ஆதீனம் 26வது குருமஹாசந்நிதானம் சுவாமிகள் காவிரியில் திருமஞ்சனமாடி குருமூர்த்த வழிபாடு, காஞ்சி வரதர் திருக்கோயில் புண்ணியகோடி விமானம்.
பரிகாரம்: தயிர்.

நல்ல நேரம் 6.00 – 7.30, 3.00 – 4.00
எமகண்டம் மதியம் மணி 10.30-12.00
இராகு காலம் மாலை மணி 7.30 – 9.00

மேஷம் : வரவு
ரிஷபம் : பயம்
மிதுனம் : நன்மை
கடகம் : செலவு
சிம்மம் : ஆதாயம்
கன்னி : சுகம்
துலாம் : நேர்மை
விருச்சிகம் : கவலை
தனுசு : தாமதம்
மகரம் : லாபம்
கும்பம் : அச்சம்
மீனம் : பகை

மேஷம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். சாதித்துக் காட்டும் நாள்.

ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அவசரத்திற்கு வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். நட்பு வட்டம் விரியும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

மிதுனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் உள்ளவர் களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. உத்யோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

கடகம்: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சகோதர வகையில் நன்மை உண்டு. வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

சிம்மம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசாங்க விஷயங்கள் நல்ல விதத்தில் முடியும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

கன்னி: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படு வார்கள். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

துலாம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருக்கு கை, கால் வலி, சோர்வு வந்துப் போகும். பழைய சிக்கல்களை தீர்ப்பீர்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.

விருச்சிகம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள்.

தனுசு: குடும்பத்தில் நிம்மதி உண்டு. எதிர் பார்த்த பணம் கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

மகரம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதம் ஏற்படும். எதார்த்தமாக நீங்கள் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

கும்பம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமன ப்பான்மையும் வந்துச் செல்லும். உறவினர், நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

மீனம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். சகோதரங்களால் பயனடை வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடுகளைக்கட்டும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக் கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபில்லி, சூனியம் என்பது என்ன? அதை பற்றிய சில உண்மைகள்!
Next articleஉள்ளங்கை மென்மையாக மாற வேண்டுமா! அப்போ இப்படி செய்யுங்கள்!