Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan இன்றைய ராசிபலன் 14.7.2018 சனிக்கிழமை !

இன்றைய ராசிபலன் 14.7.2018 சனிக்கிழமை !

0
957

இன்றைய ராசிபலன் 14.7.2018 சனிக்கிழமை !

14.7.2018 சனிக்கிழமை விளம்பி வருடம் ஆனி மாதம் 30-ம் நாள்.
வளர்பிறை பிரதமை திதி காலை 6.54 வரை பிறகு துவிதியை திதி மறுநாள் பின்னிரவு 3.34 வரை அதன் பிறகு திருதியை. பூச நட்சத்திரம் இரவு 7.24 வரை பிறகு ஆயில்யம். யோகம்: சித்தயோகம் இரவு 7.24 வரை பிறகு மரணயோகம்.
குளிகை: 6:00 – 7:30
சூலம்: கிழக்கு.
பொது: ஆழ்வார்குறிச்சி சிவசைலநாதர் வருஷாபிஷேகம், ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாள் எழுந்தருளல். ராமநாதபுரம் கோதண்டராமசுவாமி சிம்ம வாகனத்தில் திருவீதிவுலா.
பரிகாரம்: தயிர்.

நல்ல நேரம் 7-8, 10.30-1, 5-8, 9-10.
எமகண்டம் மதியம் மணி 1.30-3.00.
இராகு காலம் காலை மணி 9.00-10.30.

மேஷம் : செல்வாக்கு
ரிஷபம் : மதிப்பு
மிதுனம் : உதவி
கடகம் : பிரச்னை
சிம்மம் : அன்பு
கன்னி : பேச்சு
துலாம் : நலன்
விருச்சிகம் : நன்மை
தனுசு : சமாளிப்பு
மகரம் : மேன்மை
கும்பம் : சந்தோஷம்
மீனம் : முன்னேற்றம்

மேஷம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாயாருடன் மனஸ்தாபங்கள் வந்துச் செல்லும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.

ரிஷபம்: தைரி யமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள்.

மிதுனம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

கடகம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் மனஉளைச்சல் ஏற்படும். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்துச் செல்லும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். போராட்டமான நாள்.

சிம்மம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமன ப்பான்மையும் வந்துச் செல்லும். பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள்-. உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

கன்னி: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.

துலாம்: பேச்சைக் குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். கோபம் குறையும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மனசாட்சி படி செயல்படும் நாள்.

தனுசு: சந்திராஷ்டமம் தொடர்வதால் பல வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். சிலரின் நயவஞ்சக செயலை நினைத்து வருந்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

மகரம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

கும்பம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் தங்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். அமோகமான நாள்.

மீனம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

Previous articleஅந்த இடத்தை காட்டு: நடிகர் ராகவா லாரன்ஸ் மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்!
Next articleஅறிவோம் நம் பெருமை! மனித உடம்பின் 99 இரகசியங்கள்! அறிவியல் மட்டுமல்ல அதிசயமும்கூட! பகிருங்கள்!