Home thatstamil one india tamil oneindia tamil ulaga seithigal இன்று முதல் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை !

இன்று முதல் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை !

0
438

தென்கிழக்காசிய நாடான புரூணையில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிராக கடுமையான சட்டமொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, ஓரினச் சேர்க்கையாளர்களை கல்லால் அடித்து மரணத்தண்டனைக்குட்படுத்தும் கடுமையான இஸ்லாமிய சட்டத்தை புரூணை இன்று முதல் அறிமுகப்படுத்துகிறது.

இந்த புதிய சட்டத்தின் நடைமுறை இன்று (புதன்கிழமை) முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. இப்புதிய மரண தண்டனைச் சட்டமானது திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றங்களையும் உள்ளடக்கியுள்ளது.

புரூணையின் இந்த புதிய நடவடிக்கை சர்வதேச ரீதியில் கடும் கண்டனங்களை தூண்டிவிட்டுள்ளதோடு,புரூணையில் ஓரினச்சேர்க்கை ஏற்கனவே சட்டவிரோதமானது என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அது 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை பெறும் குற்றமாகும் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Previous articleபழைய செய்திதாள்களை வாங்கிய நபருக்கு அடித்த அதிர்ஷ்டம்! அடுத்த சில மணி நேரங்களில் தெரிந்த உண்மை!
Next articleதல அஜித்தின் மகன் ஆத்விக் இப்போ எப்படியிருக்காங்னு தெரியுமா! தீயாய் பரவும் லேட்டஸ்ட் புகைப்படம்!