இனிமேல் உருளைக்கிழங்கை இப்படி பயன்படுத்துங்கள்! இவ்வளவு அதிசயமா!

0

உருளைக்கிழங்கு என்றால் அனைவருக்குமே கொள்ளை பிரியம், இதை சாப்பிடுவதற்கு மட்டுமல்ல நம் அழகை பராமரிக்கவும் பயன்படுத்தலாம்.

உருளைக்கிழங்கை எப்படி பயன்படுத்தலாம்?
கண்களை சுற்றிய கருவளையம் மற்றும் கண் வீக்கத்திற்கு உருளைக்கிழங்கினை அரைத்து அதன் சாறு எடுத்து கண்களைச் சுற்றி தேய்த்து காய்ந்ததும் கழுவ வேண்டும்.

எண்ணெய் சருமம் உள்ளவர்கள் உருளைக்கிழங்கு சாறு, எலுமிச்சை சாறு மற்றும் 1 ஸ்பூன் தேன் ஆகியவை கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி பத்து நிமிடங்கள் கழித்து நீரில் கழுவ வேண்டும்.

வறண்ட சருமம் பிரச்சனை உள்ளவர்கள் உருளைக்கிழங்கை வேகவைத்து நன்றாக மசித்து அதனுடன் 1 ஸ்பூன் பால் பவுடர் மற்றும் 1 ஸ்பூன் பாதாம் ஆயிலை கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

வெள்ளரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கு ஆகிய இரண்டையும் பேஸ்ட் செய்து முகத்தில் தடவி வர முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தையும் நீக்கி முகத்தினை பளபளப்பாக்கும்.

தயிருடன் உருளைக்கிழங்கை அரைத்து பேஸ் மாஸ்க்காக முகத்தில் போட்டு நன்றாக காய்ந்ததும் கழுவி வந்தால், முகத்தின் நிறம் அதிகமாகும்.

முகத்தில் தோன்றும் சுருக்கங்களைப் போக்க, உருளைக்கிழங்கை நறுக்கி பிரிட்ஜில் குளிர வைத்து அதை சருமத்தில் வைத்திருக்க வேண்டும்.

நரைமுடியை கருமையாக மாற்ற உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்து அதன் தோல் நீக்கி நன்கு குழைத்து பேஸ்ட் செய்து, அதில் தயிர் அல்லது 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து ஹேர் பேக் போட்டு 40 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்கலாம்.

தழும்புகள், பருக்கள், கரும்புள்ளிகளை மறைக்க உருளைக்கிழங்கு பேஸ்ட்டுடன் 2 ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.

பொடுகு தொல்லை உள்ளவர்கள் உருளைக்கிழங்கை வேகவைத்து சாறு எடுத்து, அதனுடன் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தடவி, 1 மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.

முடி உதிர்வதை தடுக்க உருளைக்கிழங்குடன் 2 ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து தலையில் ஹேர் மாஸ்க்காக போடலாம். இதனால் அதிகமாக முடி உதிர்வது தடுக்கப்படும்.

தலையில் அடிக்கடி அரிப்பு ஏற்பட்டால், உருளைக்கிழங்கினை அரைத்து சாறு எடுத்து தலையில் தடவி 10 நிமிடம் ஊறிய பின் கழுவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவெறும் பாதாமை இந்த மாதிரி சமைத்து உணவாக சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!
Next articleமெல்ல அழிந்து வரும் அரிய மருத்துவ குணங்களை கொண்ட இந்த மரத்தைப் பற்றி உங்களுக்கு தெரியுமா!