இந்த விதை மலச்சிக்கலை உடனே போக்கும்: எப்படி சாப்பிடுவது?

0

ஆமணக்கு விதையில் இருந்து தான் விளக்கெண்ணெய் எடுக்கப்படுகிறது. இதனுடைய விதை மட்டுமில்லாமல் இலை என அனைத்திலுமே மருத்துவ குணம் நிறைந்து காணப்படுகிறது.

இத்தகைய ஆமணக்கு விதையை எப்படி பயன்படுத்த வேண்டும் அதற்கான பலன்கள் என்னவென்பதை தெரிந்துக் கொள்வோம்.

ஆமணக்கு விதையின் மருத்துவ நன்மைகள்?
1 ஸ்பூன் நெல்லி வற்றல் பொடியுடன் 1 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய்யை கலந்து இரவு உறங்கும் முன் சாப்பிட்டு வர மலச்சிக்கல் பிரச்னை விரைவில் குணமாகும்.
ஆமணக்கு விதைகளை நசுக்கி சூடு செய்து அதை இளஞ்சூட்டில் அடிவயிறு, இடுப்பின் மீது ஒத்தடம் கொடுத்தால் நீரடைப்பு, கல்லடைப்பினால் ஏற்படும் வலி, சிறுநீரக கற்கள், சிறுநீர்பாதை அடைப்பு போன்ற பிரச்னைகள் தீரும்.
சிறிது நெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் ஆமணக்கு இலைகள் ஆகிய அனைத்தையும் வதக்கி வலி உள்ள இடத்தில் கட்டி வர மூட்டுவலி, வீக்கம், கீல்வாத பிரச்னை ஆகியவை சரியாகும்.
மஞ்சள் பொடி, விளக்கெண்ணெய் கலந்து காயங்கள் உள்ள இடத்தில் தடவி வர சிராய்ப்பு காயங்கள், பாதவெடிப்பு, வீக்கம், வலி ஆகியவை குணமாகும்.
ஆமணக்கு இலைகள், கீழா நெல்லி இலை ஆகிய இரண்டிலும் பாதியளவு எடுத்து அதை தினமும் ஒருவாரம் சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை சரியாகும்.
குழந்தை பெற்ற தாய்மார்களின் அடிவயிற்றில் கோடுகள் போன்று ஏற்படும் தழும்பை போக்க, புங்கன் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகியவற்றை கலந்து தழும்பு உள்ள இடத்தில் தடவி வர மறைந்து போகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபித்தப்பையை தாக்கும் ‘சைலண்ட் ஸ்டோன்’ பற்றிய அதிர வைக்கும் உண்மைகள்!
Next articleஉங்கள் வயிற்றில் குடற்புழுக்கள் செய்யும் அட்டுழியங்கள் பற்றி தெரியுமா?