இந்த பொருட்களுக்கு காலாவதி தேதியே இல்லையாம்! இது உங்களுக்கு தெரியுமா?

0

இங்கு காலாவதி தேதியே இல்லாத சில உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

நம் வீட்டு சமையலறையில் நாம் ஏராளமான உணவுப் பொருட்களை சேகரித்து வைத்திருப்போம். குறிப்பாக அவ்வப்போது விலை அதிகமாகும் சில பொருட்களை விலை குறைவாக இருக்கும் போதே சற்று அதிகமாக வாங்கி வைத்திருப்போம். ஆனால் அப்படி அதிகமாக வாங்கி வைக்கும் பொருட்கள் நீண்ட நாட்கள் பாழாகாமல் இருக்குமா என்ற கேள்வி பலரது மனதிலும் எழும்.

ஆகவே காலாவதி தேதியே கிடையாத சில உணவுப் பொருட்களைப் பட்டியலிட்டுள்ளது. அந்த பொருட்கள் என்னவென்று தெரிந்து கொண்டு, விலை குறைவாகவே இருக்கும் போது அவற்றை அதிகம் வாங்கி பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்.

சர்க்கரை

அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களுள் ஒன்றான சர்க்கரைக்கு காலாவதி தேதியே கிடையாது. ஆகவே இந்த பொருளை அளவுக்கு அதிகமாக வாங்கினால், எங்கு சர்க்கரை கெட்டுப் போய்விடுமோ என்று அச்சம் கொள்ள வேண்டாம்.

உப்பு

உணவின் சுவையை அதிகரிக்க உதவும் உப்பிற்கும் காலாவதி தேதி கிடையாது. ஈரப்பசை இல்லாத இடத்தில் இவற்றை வைத்து பாதுகாத்து வந்தால், நீண்ட நாட்கள் உப்பு இருக்கும்.

தேன்

நல்ல சுத்தமான மலைத் தேன் எப்போதும் கெட்டுப் போகாது. வேண்டுமானால், அது கெட்டியாக மற்றும் வானிலை மாற்றங்கள் காரணமாக கற்களாக்கப்படலாமே தவிர, கெட்டுப் போகாது,

வினிகர்

வினிகர் அதிக அமிலத்தன்மை வாய்ந்தவை. சொல்லப்போனால் வெள்ளரிக்காய், ஊறுகாய் போன்றவற்றை பதப்படுத்த வினிகர் பயன்படுத்தப்படுவதால், இது கெட்டுப் போக வாய்ப்பில்லை.

சுத்தமான வென்னிலா சாறு

சுத்தமான வென்னிலா சாறு விலை அதிகமானவையாக இருந்தாலும், இது எப்போதும் கெட்டுப் போகாமல் அப்படியே இருக்கும். ஆனால் விலை மலிவில் கிடைக்கும் வென்னிலா சாறு விரைவில் அழுகிவிடும் என்பதை மறவாதீர்கள்.

நெய்

வெண்ணெயில் இருந்து தயாரிக்கப்படும் சுத்தமான நெய் கூட கெட்டுப் போகாது. ஆகவே அடுத்த முறை நெய் பாட்டில் வாங்குவதாக இருந்தால், மொத்தமாக வாங்கி பயன்படுத்துங்கள்.

அரிசி

அரிசி எத்தனை வருடங்களானாலும் கெட்டுப் போகாமல் அப்படியே இருக்கும்.

சோள மாவு

சூப், குழம்புகளில் பயன்படுத்தப்படும் சோள மாவும் கெட்டுப் போகாது. ஆனால் அதை குளிர்ச்சியான மற்றும் ஈரப்பசை இல்லாத இடத்தில் வைத்துப் பராமரிக்க வேண்டும்.

உலர்ந்த பீன்ஸ்

உலர்ந்த பீன்ஸ் வகைகளுக்கும் காலாவதி தேதி இல்லை எனத் தெரியுமா? அதுவும் இருட்டான மற்றும் ஈரப்பதமில்லாத இடத்தில் வைத்துப் பராமரிக்க வேண்டும். ஆனால் ஒரே ஒரு பிரச்சனை, நாளாக ஆக பீன்ஸை சற்று அதிக நேரம் ஊற வைத்துப் பயன்படுத்த வேண்டியிருக்கும்.

பவுடர் பால்

பவுடர் பால் அல்லது ப்ளேவர்டு பால் பவுடர் போன்றவற்றை சரியாக காற்றுப் புகாத டப்பாவில் போட்டு பராமரித்து வந்தால், கெட்டுப் போகாமல் நீண்ட நாட்கள் இருக்கும்.

சோயா சாஸ்

திறக்கப்படாத சோயா சாஸ் குறைந்தது 3 வருடங்கள் வரை நன்றாக இருக்கும். சோயா சாஸில் சோடியம் அதிகம் இருப்பதால், அதில் பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் போன்றவை வருவதற்கான வாய்ப்பு குறைவே.

காபி பவுடர்

காபி பவுடரை காற்றுப் புகாத டப்பாவில் போட்டு பராமரித்து வந்தால், கெட்டுப் போகாமல் நீண்ட நாட்கள் நற்பதமாக இருக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநீங்கள் இடது கை பழக்கம் உள்ளவரா ?அப்போ இது உங்களுக்குத்தான் !
Next articleவெடிப்புகள் ஏற்படுவதால் பதற்றம்! கொழும்பில் பற்றி எரியும் பிரபல ஆடை விற்பனை நிலையம்!