இந்த பூ பற்றி தெரியுமா? டான்டேலியன் (dandelion flower) பூக்களை உட்கொள்வதால் பல நோய்கள் குணமாகிவிடும்!

0

டான்டேலியன் பூ பல சுகாதார நலன்களை கொண்டுள்ளது. இது மஞ்சள் மலர் கொண்ட சிறிய மூலிகை செடி வகையை சேர்ந்தது. சீன மூலிகை மருத்துவத்தில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. டான்டேலியன் மூலிகையை ஆய்வு செய்த சீனர்கள் மிக அதிக ஊட்டச்சத்துகள் மற்றும் பல்வேறு மருத்துவ சிகிச்சைக்கு பயனுள்ளதாகவும் பயன்படும் என்றும் கண்டுபிடித்துள்ளனர். இதில் வைட்டமின் ஏ,பி,சி யை கொண்டுள்ளது.

டான்டேலியன் உட்கொள்வதால் பித்த ஒட்டத்தை அதிகரித்து, கல்லீரல் மற்றும் பித்தப்பைக்கு ஒரு திரவத்தை சுரக்கிறது. இந்த திரவம் செரிமான பணியின் போது கொழுப்பை குழம்பாக மாற்றுகிறது ஏனெனில் இது செரிமானத்திற்கு மிகவும் முக்கியமானதாகும்.. பித்தநீர்க்கட்டி, பித்த நாளத்தில் வீக்கம் மற்றும் கல்லீரல் நெரிசளுக்கு சிகிச்சையளிப்பதற்கு கூட பயனுள்ளதாக இருக்கிறது. டான்டேலியன் பூக்கள் பித்தநீர்க்கட்டி, பித்தப்பை அழற்சி மற்றும் மஞ்சள் காமாலை நோயாளிகளின் சிகிச்சைக்கு பயன்படுவதோடு மட்டுமல்லாமல் இது தொடர்புடைய பல்வேறு நோய்களுக்கும் விரைவான தீர்வு வழங்குகிறது. இதில் பி12 இருப்பதால் கண்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்குகிறது.

டன்டோலியன் பூக்கள் எலும்பு ஆரோக்கியம், தோல் பராமரிப்பு, முகப்பரு சிகிச்சை, எடை இழப்பு போன்றவற்றிற்கு உதவி புரிகிறது. இதை சமைப்பதற்கு பயன்படுத்தலாம். டான்டோலியன் செடியின் இலைகளை கீரைகளை சமைப்பது போல சமைத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

டான்டோலியன் பூக்களில் வைட்டமின் கே உள்ளதால் எலும்புகளுக்கு வலு சேர்க்கிறது. இது சிறுநீரை வெளியேற்றுவது மட்டுமல்லாமல் சிறுநீரில் உள்ள நச்சுக்கள் அதிகபடியான உப்புக்களை வெளியேற்றும் பண்புகளை கொண்டது. இந்த செடியின் பாகங்கள் பித்தப்பை மற்றும் கல்லீரல் சம்பந்தமான அனைத்திற்கும் தீர்வாக பயன்படுகிறது.

டான்டோலியன் பூக்களின் மைய பகுதியில் உள்ள மகரந்த தூள் தீக்காயம், பூச்சிகடி, விஷக்கடி ஆகியவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது. தாய்பால் கொடுக்கும் பெண்களுக்கு பால் உற்பத்தியை அதிக படுத்துகிறது. மனஅழுத்தம், தலைவலி, முதுகுவலி, மாதவிடாய் கோறாறு, வயிறு சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள் இதை உட்கொள்ளலாம்.

இது செரிமானம் சீர்கேடு , புற்றுநோய், இரத்தசோகை, குடல் வால் அழற்சி, நீரிழிவு நோய், பால் சுரத்தல் ,மார்பக வீக்கம், மார்பக குறைத்தல் சீழ் சேருதல் ,காய்ச்சல், பாயில்ஸ், கண் பிரச்சினைகள், நீரிழிவு, வயிற்று போக்கு, கல்லீரல் புகார்கள், சிறுநீரக நோய், தோல் பிரச்சினைகள் ,ஹார்ட் பர்ன், நுரையீரல் மற்றும் மார்பக கட்டிகள், மஞ்சள் காமாலை, ஹெபடைடிஸ், மடி வீக்க நோய், அப்சஸ்ஸஸ்,சிறுநீர் குழாய் தொற்று போன்றவற்றிற்கு நிவாரணியாக செயல்படுகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகொழுப்பை விரட்டுவது மட்டுமல்ல உடல் பருமனை குறைக்கவும் உதவும் கடுகு!
Next articleநவீன பானங்கள் வேண்டாம் மோர் குடியுங்கள்! மோர் குடிப்பதால் கிடைக்கும் நமைகள் தெரியுமா!