இந்த நோய்களினால் வீக்கம் உள்ளதா! குணமாக்கும் உணவுகள் இவைதான்!

0

ஆர்த்ரைட்டிஸ், சோரியாஸிஸ், ஆஸ்துமா, உணவுக்குழல் வீக்கம், குடல் வீக்கம், நீரிழிவு நோய், உடல் பருமன், இருதய பாதிப்பு மற்றும் சில வகை புற்று நோய்கள் போன்ற பல நோய்களின் பாதிப்பாக வீக்கம் உண்டாகும்.

இந்த வீக்கத்தினை குறைக்க நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு முறைகளை தேர்ந்தெடுத்து பின்பற்றினாலே போதும்.

வீக்கத்தை போக்கும் உணவுகள்?
அடர்ந்த நிறம் கொண்ட கீரைகள்

கருந்திராட்சை

ப்ரோக்கோலி

காலிப்ளவர், முட்டைகோஸ்

பீன்ஸ், பருப்பு வகைகள்

க்ரீன் டீ

தேங்காய்

ஆலிவ் எண்ணெய்

அடர்ந்த சாக்லேட்

மஞ்சள் மற்றும் பட்டை

ஆகிய உணவுகள் அனைத்தும் நம் உடலில் ஏற்படும் வீக்கத்தை போக்கும் உணவுகளாகும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்?
பதப்படுத்தப்பட்ட அசைவ உணவுகள், அதிக சர்க்கரை சேர்த்த உணவு வகைகள், அடர்ந்த கொழுப்பு, வறுத்த, பொரித்த உணவுகள், வெள்ளை ரொட்டி, வெள்ளை பாஸ்தா, க்ளூடன் தாவர எண்ணை, சிப்ஸ், அதிக மது, அதிக மாவுசத்து ஆகிய உணவு வகைகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

குறிப்பு
மூட்டுவலி, சோரியாஸிஸ், ஆஸ்துமா ஆகிய நோய்களினால் ஏற்படும் வீக்கத்தை தடுக்க அதற்குரிய மருந்துகளுடன் மேற்கூறப்பட்டுள்ள குறிப்புகளை சரியாக பின்பற்றினாலே போதும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபுராணத்தின் படி இந்த விரல் நீளமா இருக்குறவங்களுக்கு ஆயுசு ரொம்ப கெட்டியாம் தெரியுமா?
Next articleகண் புரை வராமல் தடுக்கும் எளிய மருத்துவம்!