இந்த ஜூஸ் கசப்பா இருந்தாலும் உடல் எடையை சீக்கிரம் குறைச்சிடும்! எப்படி பருக வேண்டும் தெரியுமா!

0

நீங்கள் உங்கள் உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை வெளியேற்றி, ஸ்லிம்மான உடலமைப்பைப் பெற நினைக்கிறீர்கள் என்றால் பாகற்காய் ஜூஸ் குடியுங்கள்.

இதனால் உடல் ஆரோக்கியம் நினைத்திராத அளவில் மேம்படுவதோடு, எவ்வித பக்கவிளைவுகளும் இல்லாமல் உடல் எடையை இயற்கை வழியில் குறைக்க உதவியாக இருக்கும்.

பாகற்காய் கசப்பாகத் தான் இருக்கும். ஆனால் எவ்வளவு தான் கசப்பாக இருந்தாலும், அந்த கசப்புத்தன்மைக்கு ஏற்ப அதில் நன்மைகளும் அடங்கியுள்ளன.

பாகற்காய் எப்படி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது?

பாகற்காயில் உள்ள குறிப்பிட்ட உட்பொருட்கள், இரத்த சர்க்கரை அளவைப் பராமரிக்க உதவுகிறது. மேலும் பாகற்காய் இரத்தத்தில் அதிகளவு சர்க்கரையை உறிஞ்சாமல் தடுக்கும்.

மேலும் பாகற்காய் கணையத்தில் உற்ற பீட்டா செல்களின் அளவை அதிகரிப்பதற்கு நல்லது.

இந்த செல்கள் இன்சுலினை சுரப்பதற்கு மிகவும் அவசியமானதாகும். எப்போது உடலில் இன்சுலின் அளவு அதிகரிக்கிறதோ, அப்போது இரத்த சர்க்கரை அளவு குறையும். இதன் விளைவாக உடல் எடை குறைய உதவி, ஸ்லிம்மான உடலைப் பெறச் செய்யும்.

பாகற்காய் ஜூஸை காய்கறிகள் மற்றும் பழங்களைக் கொண்டும் தயாரிக்கலாம் அல்லது வெறும் பாகற்காய் கொண்டும் தயாரித்துக் குடிக்கலாம்.

தேவையான பொருட்கள்
  • பாகற்காய் – 1
  • செலரி – 2 குச்சி
  • ஆப்பிள் – 2-3
  • வெள்ளரிக்காய் – 1
  • எலுமிச்சை – 1
செய்முறை
  1. முதலில் பாகற்காயின் விதைகளை நீக்கிவிட்டு, நீளமாக வெட்டிக் கொள்ளுங்கள்.
  2. பின் இதர பழங்கள் மற்றம் காய்கறிகளை துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள்.
  3. ஒருவேளை ஜூஸ் மிகவும் கசப்பாக இருப்பது போன்று தெரிந்தால், அத்துடன் வேறு ஏதேனும் பழங்களையும் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.
  4. இப்படி வாரம் 4 முறை பருகி வந்தால் உடல் எடையில் சிறந்த மாற்றத்தினை காண முடியும்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதூங்கும் முன் தொப்புளில் தினமும் 3 சொட்டு எண்ணெயை விட்டு பாருங்கள்! காலையில் அதிசயம் நடக்கும்!
Next articleநாம் விரும்பி சாப்பிடும் சாக்லெட் சருமத்தை பளபளப்பாக்குவது எப்படி தெரியுமா!