இரத்தத்தில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலை குறைப்பதற்கு இந்த ஐந்து வகையான‌ உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள்!

0

நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கு சரியான டயட் மிகவும் அத்தியாவசியமானது. அதிலும் இன்றைய பரபரப்பான காலத்தில் பலரும் இரத்த கொலஸ்ட்ரால் பிரச்சனையால் கஷ்டப்படுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் உணவுகள் தான். உண்ணும் உணவுகள் சரியானதாக இருந்தால், எந்த ஒரு நோயும் உடலைத் தாக்காது.

ஆனால் எங்கும் கொழுப்புக்கள் அதிகம் நிறைந்த ஜங்க் உணவுகளைக் கொண்ட சூழலில் வாழ்வதால், நம்மை அறியாமலேயே நாம் கொழுப்புக்கள் அதிகம் உள்ள உணவுகளை அடிக்கடி உட்கொள்ள நேரிடுகிறது. இதனால் இரத்தக் குழாய்களில் கொழுப்புக்கள் படிந்து, இதய நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இருந்தாலும் மனக்கட்டுப்பாடு மற்றும் போதிய உடற்பயிற்சிகளை அன்றாடம் செய்து வந்தால், நிச்சயம் கொலஸ்ட்ரால் பிரச்சனைகளைக் குறைக்கலாம். அதுவும் உணவுகளைக் கொண்டே கொலஸ்ட்ராலைக் குறைக்க முடியும்.

இங்கு நம் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் டாப் 5 உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து உணவில் சேர்த்து உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனைக்கு தீர்வு காணுங்கள்.

ஆலிவ் ஆயில்
ஒருவர் தங்கள் உணவில் ஆலிவ் ஆயிலை சேர்த்து வந்தால், அதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் கலவைகள், இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால் குறையும். எனவே உங்களுக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பின், சமையலில் ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்தி, உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

நட்ஸ்
நட்ஸ்களான வால்நட்ஸ், பாதாம் போன்றவை இதய நோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும். ஏனெனில் இவைகளில் உள்ள நல்ல கொலஸ்ட்ரால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்துவிடும். ஆனால் இந்த நட்ஸ்களை உப்பு சேர்க்காமல் சாப்பிடுவது தான் நல்லது.

மீன்
மீன்களை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அதில் உள்ள அதிகப்படியான ஒமேகா-3 ஃபேட்டி அமிலம், கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைத்து, இரத்தம் உறையும் வாய்ப்பைத் தடுத்து, இதயத்தின் ஆரோக்கியம் மேம்படும்.

ஓட்ஸ்
ஓட்ஸில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும். மேலும் இது இரத்த ஓட்டத்தில் கொலஸ்ட்ரால் உறிஞ்சுவதையும் குறைக்கும். எனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், ஓட்ஸை அன்றாடம் உட்கொண்டு வருவது நல்லது.

பூண்டு
தினமும் 2 பல் பூண்டை பச்சையாக காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு குறைவதைக் காணலாம். வேண்டுமெனில் முயற்சித்துப் பாருங்கள்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகாலையில் பூண்டு பால் குடிப்பதால் கிடைக்கும் எண்ணிலடங்காத‌ நன்மைகள்!
Next articleதலையில் பேன் வந்துவிட்டால் பேனை ஒரே நாளில் போக்க இதோ சில‌ டிப்ஸ்!