இந்த எண்ணெயை இப்படி தேய்ங்க!உங்க முடியும் இப்படி அடர்த்தியா வளரும் !

0

கடுகு எண்ணெய் சமையலில் மட்டுமல்ல நிறைய உடல் நல நன்மைகளையும் நமக்கு அள்ளித் தருகிறது.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், சலதோஷத்தை போக்குதல், சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை கொடுத்தல், கூந்தல் வளர்ச்சியை தூண்டுதல் போன்றவற்றை செய்து வருகிறது.

கடுகு எண்ணெய்யில் ஆல்பா கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இது நமது கூந்தலுக்கு நல்ல ஈரப்பதத்தை கொடுக்கிறது. மேலும் இந்த அமிலங்கள் ஒரு நல்ல கண்டிஷனராக செயல்படுகிறது. இதனால் ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சியை உடனே பெறலாம்.

இந்த நவீன காலங்களில் கூந்தல் உதிர்தல் மற்றும் அடர்த்தி குறைந்து போவது எல்லாருடைய பிரச்சினையாகவே இருக்கிறது.

இதற்கு காரணம் நமது முடியின் வேர்க்கால்கள் வலிமையிழந்து போவது தான். இந்த பிரச்சினை நம்மை சுற்றியுள்ள மாசுக்கள், மன அழுத்தம், ஊட்டச்சத்து பற்றாக்குறை இவற்றால் ஏற்படுகிறது.

கடுகு எண்ணெய்யை கொண்டு உங்கள் முடியை மசாஜ் செய்யும் போது வலிமையடைகிறது. முடி உதிர்தல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது.

கடுகு எண்ணெய் ஹேர் பேக்ஸ்

கடுகு எண்ணெய் மற்றும் யோகார்ட்

ஒரு பெளலில் கடுகு எண்ணெய் மற்றும் யோகார்ட் சேர்த்து கலந்து கொள்ளவும்.

அதை தலை மற்றும் கூந்தலில் அப்ளே செய்யுங்கள். ஒரு துண்டை சுடுநீரில் நனைத்து தலையை சுற்றி அணிந்து கொள்ளுங்கள்.

இதை 30-40 நிமிடங்கள் வைத்து இருந்து மைல்டு சாம்பு கொண்டு அலசவும். இதை வாரத்திற்கு இரண்டு முறை என ஒரு மாதம் செய்து வந்தால் மென்மையான பொலிவான கூந்தல் கிடைக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleராஜயோகத்தை அள்ளி கொடுக்க போகும் செவ்வாய் பெயர்ச்சி எந்த ராசிக்காரர்கள் பணமழையில் நனையப்போகின்றார்கள்?
Next articleசெவ்வாய் பெயர்ச்சியால் விபரீத ராஜயோகம் இந்த‌ 4 ராசிக்கும் காத்திருக்கு ! திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள்!