இந்த உணவுகளை அதிகம் சாப்பிடாதீர்கள்: நரைமுடி வர வாய்ப்புள்ளது!

0

இளமைப் பருவத்திலே சிலருக்கு நரை முடிகள் வருவதற்கு மரபியல் ரீதியாக பல காரணங்கள் இருந்தாலும், நாம் எடுத்துக் கொள்ளும் உணவுப் பழக்கங்களும் ஒரு காரணமாக அமைகிறது.

அப்படி எந்த உணவுகளை சாப்பிடுவதால் நரைமுடிகள் வரும் என்பதை இங்கு காணலாம்.

நரைமுடியை உண்டாக்கும் உணவுகள் எவை?

சர்க்கரையை மட்டுமே அதிகமாக சாப்பிட்டு வந்தால், நரைமுடி விரைவில் வந்துவிடும். எனவே அளவோடு சாப்பிடுவது நல்லது.

துரித உணவுகள், சோடா, பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்கள் ஆகியவற்றை பருகுவதன் மூலமும் நரைமுடிகள் வரும்.

நம் உடலுக்கு உப்பு மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்றாலும், அதை அளவுக்கு அதிகம் சேர்த்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது.

உணவின் சுவை அதிகப்படுத்த கடை உணவுகள், கேன்களில் அடைக்கப்பட்ட காய்கறிகள், சூப் போன்றவற்றில் சேர்க்கப்படும் அஜினமொட்டோ நரைமுடியை ஏற்படுத்தும்.

மீன் மற்றும் இறைச்சியில் இருந்து கிடைக்கும் கொழுப்புகளை அதிகமாக சாப்பிடுவதாலும் நரைமுடி பிரச்சனையை உண்டாக்கும்.

செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்படும் உணவுப் பொருட்களை சாப்பிடுவதாலும் நரைமுடி பிரச்சனைகள் ஏற்படும்.

சில வகை மாவுகள் வெண்மையாக பளிச்சென்று பிளிச்சிங் செய்யப்பட்டு இருக்கும். அத்தகையை கோதுமை மாவை சாப்பிட்டாலும் நரைமுடி உண்டாகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇளஞ்சூடான தண்ணீரை குடிச்சா இவ்ளோ நன்மைகளா! கண்டிப்பாக தெரிந்துகொள்ளுங்கள்.
Next articleநாக்கில் இந்த சுவையை உணர்ந்தால் ஏதாவது நோயின் அறிகுறியாக இருக்கலாம்!