இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம்! இலங்கைக்கு பாதிப்பா?

0
471

இந்தோனேசியாவின், பெரோஸ் தீவுக்கு அருகிலுள்ள கடலுக்கு அடியில் இன்று மாலை பாரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் அறிவித்துள்ளது.

6.5 ரிச்ட்டர் அளவில் குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலநடுக்கம் கடலுக்கடியில் 532 கிலோமீற்றர் தொலைவில் ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த நிலநடுக்கத்தின் காரணமாக இலங்கைக்கு எவ்வித பாதிப்புக்களும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleவெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன தெரியுமா!
Next articleவயிற்றில் புற்றுநோய் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்!