வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன தெரியுமா!

0

வாழைப்பழத்தில் நம் உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆனால் இந்த வாழைப்பழத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் பல பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்.

வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் பக்கவிளைவுகள்?

வாழைப்பழத்தில் மைக்ரோ நியூட்ரியன்டுகளான பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் ஃபைபர் ஆகிய மூன்று சத்துக்களும் உள்ளது. எனவே அதை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் பல மோசமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.

வாழைப்பழத்தில் உள்ள சர்க்கரை நம் உடலில் உள்ள ஆற்றலை தூண்டி சுறுசுறுப்பை ஏற்படுத்தும். ஆனால் சில நேரம் கழித்து அதற்கு எதிர்மறையாக மிகுந்த சோர்வை உண்டாக்கும்.

வாழைப்பழம் சாப்பிடுவதால் அதிக உறக்கம் வருவதை போன்ற உணர்வு தோன்றும். அதோடு உடல் எடை உடனடியாக அதிகரிக்க கூடிய தன்மையை வாழைப்பழம் கொண்டுள்ளதாக உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

வாழைப்பழம் அனைத்து பழங்களை போன்றே அமிலத்தன்மை கொண்டது. அதனால் அதை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் குடல் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

வாழைப்பழத்தில் உள்ள மெக்னீசியம் சத்துக்கள், வெறும் வயிற்றில் சாப்பிடும் போது, அது ரத்தத்தில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் அளவுகளில் குறைபாடுகளை உண்டாக்கி கார்டியோ வாஸ்குலார் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

ஆயுர்வேதத்தின் படி வாழைப்பழம் மட்டுமில்லாமல், எந்தவொரு பழங்களையுமே வெறும் வயிற்றில் சாபிடக் கூடாது என்று கூறுகிறது. ஏனெனில் அவைகள் பல ரசாயனங்களில் விளைவிக்கப்படுவதால் அது வயிற்று புண்ணை ஏற்படுத்திவிடும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபப்பாளி விதைகளில் உள்ள மருத்துவ பயன்கள் சில! இனிமேல் தூக்கி எறிந்துவிடாதீர்கள் பொடியாக்கி வையுங்கள்!
Next articleஇந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம்! இலங்கைக்கு பாதிப்பா?