Home Rasi Palan ராசி பலன் இந்து மத பூஜைகளில் ஏன் சக்திவாய்ந்த சங்கு ஊதப்படுகிறது தெரியுமா! அறிவியலே வியக்கும் அதிசயம்!

இந்து மத பூஜைகளில் ஏன் சக்திவாய்ந்த சங்கு ஊதப்படுகிறது தெரியுமா! அறிவியலே வியக்கும் அதிசயம்!

0
700

இந்து மதத்தில் கடவுள் வழிபாட்டில் பல வித்தியாசமான சடங்குகள் உள்ளது. அதில் முக்கியமான ஒன்றுதான் பூஜையின் போது சங்கு ஒலிப்பது.

கோவிலாக இருந்தாலும், வீட்டு பூஜையாக இருந்தாலும் சங்கு ஒலிப்பது என்பது முக்கியமான ஒன்றாகும். இது ஏன் அனைத்து பூஜைகளுக்கு முன்னரும் சங்கு ஒலிக்கப்படுகிறது என்பதை இனி பார்க்கலாம்.

ஆயுர்வேதம்

ஆன்மீகம் தவிர்த்து அறிவியல் ரீதியாகவும் சங்கிலிருந்து வெளிப்படும் ஒலிக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது. சங்கு சரியாக ஒலிக்கப்படும் போது அது சுற்றுப்புறத்தில் இருக்கும் நிறைய மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்களை அழிக்கிறது.

வீட்டை சுத்தம் செய்யும்

பழைய முறை வீட்டை பாக்டீரியா மற்றும் வைரஸ்களிடம் இருந்து பாதுகாக்க எப்படி சாணத்தை கரைத்து வீட்டில் பூசுவார்களோ அதேபோல சங்கு ஊதுவதும் வீட்டை சுத்தம் செய்யும் ஒரு முறையாகும். இது வீட்டில் உள்ளவர்களை பல நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும் முறையாகும்.

பூஜைக்கு முன்

முன்னரே குறிப்பிட்டது போல இந்து மதத்தில் சங்குக்கு என்று ஒரு முக்கியத்துவம் உள்ளது, பூஜைகளில் இது பயன்படுத்தப்பட காரணங்களும் உள்ளது. வராக புராணத்தில் குறிப்பிட்டுள்ளபடி சங்கு ஊதாமல் எந்த கோவிலின் கதவும் திறக்கப்படாது.

சக்திவாய்ந்த அதிர்வுகள்

சங்கை ஊதும்போது அதிலிருந்து சக்திவாய்ந்த அதிர்வுகள் வெளிப்படும் என்பது நாம் அறிந்ததுதான். பூஜையின் போது இதிலிருந்து வரும் சக்திவாய்ந்த அதிர்வுகள் நம்மை சுற்றியிருக்கும் எதிர்மறை ஆற்றல்களை விரட்டும் என்று கூறப்படுகிறது.

மேலும் இது ஆற்றலை ஒரு இடத்தில் குவிக்கும் மையப்புள்ளியாகவும் இருக்கிறது.

சாதாரண மனிதர்களுக்கு சாதாரண மக்களுக்கு புரியும்படி கூற வேண்டுமென்றால் பூஜையின் போது மணி அடிப்பது எப்படி கவனத்தை ஈர்த்து காஸ்மிக் ஆற்றலை உருவாக்குகிறதோ சங்கு ஒலிப்பது அதனை விட சக்திவாய்ந்த ஒன்றாகும்.

Previous articleவாழ்நாள் முழுவதும் ரத்த அழுத்தமே வராமல் இருக்கணுமா! இத சாப்பிடுங்க போதும்!
Next articleவாணி ராணி தொடரின் வில்லனாக நடித்தவரின் மனைவியை பார்த்துள்ளீர்களா! என்ன சொல்கிறார் பாருங்க!