இந்தியா ராணுவ விமானி அபிநந்தன் மீண்டும் பணிக்கு திரும்புகிறாரா! ராணுவ வட்டாரத்தில் இருந்து வந்த தகவல்!

0

மருத்துவ விடுப்பு முடியும் முன்பே விங் கமேண்டர் அபிநந்தன் பணிக்குத் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவும் தீவிரவாதிகள், காஷ்மீரில் பகுதியில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் புல்வாமா தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, இந்திய ராணுவ நிலைகளை அழிக்கும் முயற்சியாக பாகிஸ்தான் காஷ்மீரின் பூஞ்ச், ரஜோரி மாவட்டத்துக்குள் அத்து மீறி நுழைந்தன.

இவற்றை இந்திய விமானப்படை விரட்டி அடித்தது. அப்போது இந்திய விமானப்படை விமானி அபினந்தன் சென்ற விமானம் பாகிஸ்தான் ராணுவ பகுதிக்குள் விழுந்தது.

இதை தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவத்தால் பிடிக்கப்பட்ட அபினந்தன். கடந்த 1ம் தேதி விடுவிக்கப்பட்டார். இதன்பிறகு அவருக்கு உடல் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. பின்னர் சிகிச்சை அளிக்கப்பட்டது. 4 வார விடுப்பில் இருந்தார். இதன்பின் அவர் சென்னையில் உள்ள பெற்றோரைச் சந்திக்கவும் அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில் அவருக்கு மீண்டும் உடல்நல பரிசோதனை நடத்தி, பின் பணியில் சேர அனுமதி அளிக்கப்படும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅமைச்சராகிறார் டக்ளஸ்! தடுமாறும் கூட்டமைப்பு! ரணிலின் ஆட்டம் ஆரம்பம்!
Next articleநமது வாக்கின் வலிமையை பற்றி அரங்கத்தையே அதிர வைத்த கோபிநாத்தின் சரமாரியான கேள்விகள்! திகைத்துப்போன பார்வையாளர்கள்!