Home thatstamil one india tamil oneindia tamil இதனால் தான் பிக்பாஸில் பெண்களை மட்டும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தேன்- வெளியேறிய பின் மோகன் வைத்தியா...

இதனால் தான் பிக்பாஸில் பெண்களை மட்டும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தேன்- வெளியேறிய பின் மோகன் வைத்தியா விளக்கம் !

0
1524

பிக்பாஸில் கடந்த வாரம் மோகன் வைத்தியா எலிமினேட் ஆனார். இவர் வெளியேறியது பெரும்பாலான ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையே ஏற்படுத்தியது.

ஏனெனில் பிக்பாஸ் வீட்டில் பெண்களுடன் இவர் மிகவும் நெருக்கமாக இருந்தது பார்வையாளர்களுக்கு நெருடலை கடந்து ஒரு வித வெறுப்பையே ஏற்படுத்திவிட்டது.

இந்நிலையில் வெளியேறிய பின் இதுகுறித்து மோகன் வைத்தியா தற்போது விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், நான் எந்த ஒரு பெண்ணிற்கும் வேறொரு எண்ணத்தில் முத்தம் கொடுக்கவில்லை, கட்டிப்பிடிக்கவில்லை. என்னுடன் பிறந்தவர்கள் சகோதரர்கள் மட்டுமே தங்கை கிடையாது.

அதன் காரணமாகவே பெண் குழந்தைகளை பார்த்தால் நான் அவர்களை என் மகள் போன்று நினைப்பேன். இவ்வளவு ஏன், நான் நாட்டியத்தில் 46 வருடங்களாக பணியாற்றினேன். அதில் சுமார் 14 வருடங்கள் டில்லியில் கழிந்தது. அப்போது அங்கிருந்தவர்கள், என்னுடன் பழகியவர்கள், என்னை நம்பி பெண் குழந்தைகளை அனுப்பலாம் என கூறுவர். அந்தளவிற்கு நான் உண்மையாக இருப்பேன் என்று கூறினார்.

மேலும், மீரா உள்ளே நுழைந்த போதே நான் இங்கு யாரையும் அம்மா, அப்பா என கூற மாட்டேன் என கூறிவிட்டார். அதனாலேயே அவர் கொக்கி போட சொன்னப்போது மறுத்தேன் எனவும் கூறியுள்ளார்.

Previous articleபிக்பாஸில் முகேன் சிகரெட் பிடிப்பார்- லொஸ்லியா பற்றி ஒரே வார்த்தையில் கூறிய மோகன் வைத்தியா !
Next article6 மாதத்தில் பிறந்த குழந்தை குழப்பத்தில் அழகியை திருமணம் செய்து விவாரகரத்து செய்த மன்னர் !