அறிகுறிகள் இவைதான்! ஆண்களுக்கு வரும் புரோஸ்டேட் வீக்கம்!

0

ஆண்களுக்கு வயது அதிகரிக்கும் போது, பெரும்பாலானோருக்கு புரோஸ்டேட் சுரப்பியில் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். அதனால் வயதான பின் ஆண்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றாக புரோஸ்டேட் வீக்கம் உள்ளது.

ஆண்களின் உடலில் அடிவயிற்றில், சிறுநீர்ப்பைக்குக் கீழே சிறுநீர்க் குழாய் தொடங்கும் இடத்தில் புரோஸ்டேட்(prostate) சுரப்பி அமைந்துள்ளது.

இந்த சுரப்பியின் நடுவே சிறுநீர்ப்பையில் இருந்து சிறுநீரை வெளியேற்றும் குழாய் செல்கிறது, இச்சுரப்பி ஆண்களின் பாலியல் சுரப்பியாகும்.

இதில் ஜிங்க் மற்றும் புரத என்சைம் கலந்த திரவம் சுரக்கிறது, வெண்ணெய் போன்ற இத்திரவம் விந்து செல்லுக்கு ஊட்டம் அளிக்க உதவுகிறது.

புரோஸ்டேட் வீக்கம் ஏற்படுவது ஏன்?

பரம்பரை காரணமாக சிலருக்கு இருபது வயதிலேயே புரோஸ்டேட் வீக்கம் ஏற்படும். ஆனால், சிலருக்கு மட்டுமே இது பிரச்சனை ஆகிறது.

ஆண்களுக்கு வயதாகும் போது டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோனின் சுரப்பு குறையும் போது புரோஸ்டேட் வீக்கம் உண்டாகும்.

புரோஸ்டேட் வீக்கத்தின் அறிகுறிகள்?


சிறுநீர் சிறுகச் சிறுக அடிக்கடி வெளியேற்றுவது,

நீர்க்கடுப்பு, எரிச்சல் ஆகிய அறிகுறிகள் தென்படுவது,

சிறுநீர் மெல்லியதாகப் போவது,

சிறுநீர் கழிக்கும் போது தடைபடுவது,

இரவு நேரத்தில் 10 முறைக்கு மேல் சிறுநீர் கழிப்பது,

சிறுநீர் கழித்த பின்பும் சிறுநீர் உள்ளது போல் உணர்வது,

சிறுநீர் கழித்த கடைசியில் சொட்டுச் சொட்டாகப் சிறுநீர் வெளியேறுவது

ஆகிய அனைத்தும் புரோஸ்டேட் வீக்கத்தின் அறிகுறிகள் ஆகும்.

பெண்களை விட ஆண்களை மட்டுமே அதிகம் தாக்கும் 7 நோய்கள்!

பலரும் பெண்கள் தான் அடிக்கடி ஒரு குறிப்பிட்ட நோயால் அவஸ்தைப்படுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதில் மன இறுக்கம், இதய நோய்கள், தைராய்டு போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஆனால் ஆராய்ச்சியாளர்களோ, பெண்களை விட ஆண்கள் தான் அதிகளவு நோயால் கஷ்டப்படுவதாக கூறுகின்றனர்.

அந்த வகையில் இங்கு ஆண்கள் அதிகமாக கஷ்டப்படும் சில நோய்கள் மற்றும் பிரச்சனைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

பெண் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜென், காய்ச்சலை உண்டாக்கும் ஒருவகை வைரஸின் வளர்ச்சியைக் குறைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அதே சமயம் ஆண்களின் உடலிலும் சிறிது ஈஸ்ட்ரோஜென் உற்பத்தி செய்யப்பட்டாலும், அதனால் காய்ச்சலை உண்டாக்கும் வைரஸை எதிர்த்துப் போராட முடியாமல், ஆண்கள் அடிக்கடி காய்ச்சலால் அவஸ்தைப்படச் செய்வதாகவும் கூறுகின்றனர்.

பல ஆய்வுகள் ஆண்கள் பெண்களை விட அதிகளவு புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக கூறுகின்றன. அதிலும் புரோஸ்டேட் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், உணவுக்குழாய் புற்றுநோயால் தான் ஏராளமான ஆண்கள் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகள் தான் ஆட்டிசத்தால் பாதிக்கப்படுவதாகவும், இதற்கு ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள் பிறக்கும் போது அதிகளவு சாம்பல் நிற திசுக்களை கொண்டிருப்பது தான் காரணமாகவும் கூறப்படுகின்றன.

பெண்களை விட ஆண்கள் தான் டைப்-2 நீரிழிவால் கஷ்டப்படுகின்றனர். இதுக்குறித்து 95,000-த்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், ஆண்கள் தான் இந்த நோயுடன் வாழ்ந்து வருவதாக தெரிய வந்தது.

சிறுநீரக நோயால் பெண்களை விட ஆண்கள் தான் அதிகமான சிரமத்தை சந்திக்கிறார்கள். இப்படி சிறுநீரக நோய்கள் ஆண்களை அதிகம் தாக்குவதற்கு காரணம் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து, சரியான அளவு நீரைப் பருகாமல் வேலை செய்வது தான்.

சுய நினைவு இழக்கும் வரை அளவுக்கு அதிகமாக மது அருந்துவதில் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம். மதுப்பழக்கம் ஓர் கெட்ட பழக்கமாக இருந்தாலும், இது ஓர் நாள்பட்ட நோய் தான். இதனால் தான் ஆண்களின் வாழ்நாள் பெண்களை விட குறைவாக உள்ளது.

பெரும்பாலான ஆண்கள் இதய நோயால் தான் இறப்பை சந்திக்கின்றனர். இதய நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கைப் பார்க்கும் போது, பெண்கள் விட ஆண்களின் எண்ணிக்கை தான் அதிகம். இதற்கு ஆண்களது உணவுப் பழக்கம் மற்றும் இதர பழக்கவழக்கங்களைக் காரணமாக கூறலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇந்த மூன்று பொருட்களே போதும்! நாள்பட்ட மாதவிடாய் சரியாகும்!
Next articleஜப்பானியர்களின் இந்த கலையை பற்றி தெரியுமா? அறிவியலே வியக்கும் ஆச்சரியம்! சில நிமிடங்களில் உயிர் பிழைக்கும் அதிசயம்!