ஜப்பானியர்களின் இந்த கலையை பற்றி தெரியுமா? அறிவியலே வியக்கும் ஆச்சரியம்! சில நிமிடங்களில் உயிர் பிழைக்கும் அதிசயம்!

0

ஜப்பானியர்களின் இந்த கலையை பற்றி தெரியுமா? அறிவியலே வியக்கும் ஆச்சரியம்! சில நிமிடங்களில் உயிர் பிழைக்கும் அதிசயம்!

நம் அன்றாட வாழ்க்கை முறையில் ஒரு இயந்திரம் போல உழைத்து கொண்டிருக்கிறோம். நம் உழைப்பு நமது உடலின் செயல்திறனை பொருத்தே அமையும்.

ஒருவர் அதிக பலம் கொண்டவராக இருந்தால் அவரின் வேளைகளை மிக விரைவாக முடித்து விடுவார். இதுவே ஒருவரின் உடல் திறன் குறைவாக இருந்தால், அந்த வேலைகளை முடிக்க நீண்ட நேரம் எடுத்து கொள்வார்.

எனவே நம் செயல் நமது உடலில் ஆரோக்கியத்தை வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது. உடலில் நலனை உணவுகள் மூலமாகவும், உளவியல் பயிற்சியின் வழியாகவும் அதிகரிக்கலாம்.

அல்லது பாரம்பரிய கலைகளின் உதவியோடு உடலின் நலத்தை பாதுகாக்கலாம். இந்த பதிவில் போதிதர்மரின் கலையை போன்ற ஜப்பானியர்களின் ஷியட்ஸு கலை உடலின் ஆரோக்கியத்தை எவ்வாறு சீராக வைக்க பயன்படுகிறது என்பதை பார்ப்போம்.

ஷியட்ஸு
நம் முன்னோர்கள் ஆதிகாலம் முதல் கற்று கொடுத்த பல வைத்திய கலைகள் இந்த நவீன உலகில் அழிந்து கொண்டே வருகிறது. போதிதர்மர் போன்றவர்களில் கலைகள் நம் நாட்டிலிருந்து சென்று, வேறு சில நாடுகளுக்கு முன்னோடியாக திகழ்கிறது. இதை போலவே ஜப்பானியர்களும் சில வைத்திய கலைகளை கற்று வைத்திருந்தனர்.

அவற்றில் ஒன்றுதான் ஷியட்ஸு. உடலின் எல்லா பிணிகளையும் இது குணப்படுத்தும். இதனை செய்ய பிரத்தியேகமாக எந்த பொருளும் தேவை இல்லை. நம்முடைய சொந்த கையின் உதவி மட்டும் போதும். அத்துடன் இதில் நிறைய நன்மைகள் இருப்பதாக இன்றைய அறிவியல் கூறுகிறது.

பாதங்களில் அழுத்தம்
உங்கள் வலது பாதத்தின் அடிப்பகுதியில் இரண்டு கட்டை விரல்களையும் வைத்து அழுத்தம் கொடுங்கள். இந்த பயிற்சி மூளையின் செயல்திறனை சீராக வைத்து ரத்த அழுத்தத்தை குணப்படுத்தும். மேலும் உளவியல் ரீதியாக அதிக பலனை தரும். அத்துடன் இதயத்தின் செயல்திறனை அதிகரித்து உடலுக்கு சுறுசுறுப்பை ஏற்படுத்தும்.

அடி அழுத்தம்
உடல் வலிகள் அனைத்தும் பறந்து போகவும், மன அழுத்தங்கள் குறையவும் இந்த முறை வழி செய்யும். இதற்கு 2 கால்களையும் சம்மணம் போல வைத்து, அதன் பாதங்களின் நடுவில் கட்டை விரலை கொண்டு அழுத்தம் தரவும். இதனை 20 நொடிகள் செய்ய வேண்டும். இது உடலின் சக்கரத்தை சீராக வைத்து மனதிற்கு அமைதியை தரவல்லது.

விரல்களுக்கு வலிமை
இந்த முறையை செய்வதால் பாதங்களின் வலிமை அதிகரிக்கும். இதற்கு ஒவ்வொரு கால் விரல்களையும் மேல் புறமாக மசாஜ் செய்து சிறிது அழுத்தத்தை தரவும். முதலில் கால் கட்டை விரல்களில் இருந்து சுண்டு விரல் வரை மெல்ல இழுத்து, நெட்டு உடைப்பது போல அழுத்தத்தை கொடுக்கவும். இதனை 5 முதல் 10 முறை செய்ய வேண்டும்.

இதயம் சீராக
உங்கள் 2 கைகளையும் மார்பகங்கள் மீது வைத்து மேலும் கீழுமாக மசாஜ் கொடுக்கவும். குறைந்தது 10 நிமிடம் வரை இந்த உடல் பயிற்சியை பண்ணவும். இவ்வாறு செய்வதால் இதயத்தில் ரத்த ஓட்டம் சீராக நடைபெறும். ரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் இதனை செய்தால் ரத்த அழுத்தம் குறையும்.

கைகளுக்கு வலிமை
கைகள்தான் நமது உடலின் தூரிகை. இதற்கு அதிக அக்கறையும் பலமும் கண்டிப்பாக வேண்டும். இந்த பயிற்சி முறையில் இடது கையை வலது கையின் நடுவில் வைத்து அழுத்தம் கொடுங்கள். அதே போல வலது கையை இடது கையின் நடுவில் வைத்து அழுத்தம் கொடுங்கள். இதனை 30 முதல் 60 நொடிகள் செய்யவும். இது கைகளின் உட்பகுதி நரம்புகளுக்கு அதிக பலத்தை தரும்.

கையின் உட்பகுதி
எவ்வளவு எடையை தூக்கினாலும் கைகள் வலிக்க கூடாதென்றால் இந்த முறையை செய்யுங்கள். அதிக அழுத்தத்தை கையின் முதல் பகுதியில் கொடுக்க வேண்டும். இதனை இரண்டு கைகளிலும் மாறி மாறி 30 முதல் 60 நொடிகள் வரை செய்யவும். இவ்வாறு செய்வதால் கையின் உட்பகுதி அதிக உறுதி பெரும்.

முழு பலம்
கையின் முழு பகுதியும் அதிக வலிமை பெற வேண்டும் என்றால் இந்த ஷியட்ஸு முறை பயன்படும். முதலில் மணிக்கட்டை முன்னும் பின்னுமாக வட்ட இயக்கத்தில் சுழற்றவும். 2 கைகளிலும் இதனை 40 நிமிடங்கள் பயிற்சி செய்யவும். இது முழு கையின் பலத்தையும் கூட்டும். பொதுவாக இந்த பயிற்சி விளையாட்டு வீரர்களுக்கு அதிகம் உதவும்.

தலை
உடலில் முக்கிய உறுப்புகள் உள்ள பகுதி தலைதான். இதற்கு கட்டாயம் ஷியட்ஸு பயிற்சி தேவை. இதனை செய்ய, இரண்டு கைகளையும் நெற்றி பொறியில் வைத்து கட்டை விரலால் நன்கு அழுத்தம் ஏற்படுத்தவும். அடுத்து வட்ட இயக்கத்தில் அழுத்தம் தரவும். இவ்வாறு 5 முதல் 10 நிமிடம் வரை மெல்லமாக செய்ய வேண்டும். இது முழு உடல் ஆரோக்கியத்தையும் சீராக வைக்கும் வைத்திய கலை.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅறிகுறிகள் இவைதான்! ஆண்களுக்கு வரும் புரோஸ்டேட் வீக்கம்!
Next articleஆண்களையும் தாக்கும் மார்பகப் புற்றுநோய்!