சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஐபிஎல் போட்டியை நேரில் காண வந்த மாற்றுத்திறனாளியை போலீசார் அவமரியாதையுடன் பேசி அனுப்பும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த 7 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை அணிகள் மோதிய ஐபிஎல் போட்டி நடைப்பெற்றது. சென்னை அணியின் ஆட்டம் என்பதால் வழக்கம் போல் அரங்கத்தில் கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூட்டம். அதிலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குவாலியர்-1 ஆட்டம் என்பதால் ஐபிஎல் ரசிகர்கள் போட்டியை காண அலையென திரண்டு வந்திருந்தனர்.
இந்த சமயத்தில், சமூக ஆர்வலரான தீபக் என்ற மாற்றுதிறனாளி தனது மனைவியுடன் ஐபிஎல் போட்டியை நேரில் காண காரில் சென்றிருந்தார்.
அப்போது, கார் பார்க்கிங்க்கு அனுமதி இல்லாததால் தீபக் உள்ளே செல்வதற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
இதனால் தீபக் காரில் இருந்து இறங்கி தான் ஒரு மாற்றுத்திறனாளி என போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அப்போது அங்கிருந்த கான்ஸ்டபிள் ஒருவர் அவரிடம் பொறுமையாக எடுத்துக் கூறி கார் உள்ளே செல்வதற்கு அனுமதி இல்லை என்று கூறியுள்ளார்.அப்போது அவருக்கு பின்னால் ஜூப்பில் அமர்ந்துக் கொண்டிருந்த உதவி ஆணையர் தீபக்கிடம் அவமரியாதை பேசியுள்ளார்.
குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
@chennaipolice_ was not allowed to even enquire, "Is there any provision for disabled parking?". Assistant commissioner abused verbally, physically pushed me despite having a valid ticket.Should we not drive a vehicle? Should v not ask parking? R v not citizens? Prof Deepak pic.twitter.com/cQu4nqcd1Q
— Deepaknathan (@Deepak_TMN) May 7, 2019




