Home Patti Vaithiyam ஆகார முறை தாது விருத்திகள் !

ஆகார முறை தாது விருத்திகள் !

0
970

தூதுவளை:
தூதுவளைக் காயை நெய்யில் வறுத்து , அதனளவு கற்கண்டு சேர்த்து, சிறிது தேன்விட்டு மைய அரைத்து பாட்டிலில் பத்திரப்படுத்தவும். தினசரி இரவில் பட்டாணி அளவு வெந்நீருடன் 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட கனவில் விந்து கழிதல் நீங்கும் தாது புஷ்டி உண்டாகும்.

“காது மந்தம் காதெழுச்சி காசந் தினவுமதம்

ஒதுமந்தம் முத்தோடம் உட்சூலை – தாதுநட்டம்

மீதுளைப் பத்திரியை மேவச்செய்ய வாராயந்தோர்

தூதுவளைப் பத்திரியைத் துய்த்து”

தூதுவளைப் பூவினால் ஆண்மை பெருகும். நரம்புகள் பலப்படும்

தென்மை :
வெடிக்காத தென்னம்பாளையில் உள்ள பிஞ்சுகளை பசும்பால் விட்டு அரைத்து 20 கிராம் அளவு காலை, மாலை, ஒரு மண்டலம் சாப்பிட.. நீர்த்துப்போன விந்தினை கட்டிபடுத்தும், விதைவாதம் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

நன்னாரி :
பச்சை நன்னாரி வேர் சிறிதளவு எடுத்து மைய அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டு வர மேகச்சூடு, மேகவெட்டை, நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு, விந்து விடுகையில் ஏற்படும் கடுப்பு தீரும்.

நாயுருவி:
நாயுருவி விதையை உமி நீக்கி அரிசி கழுவிய நீருடன் கஞ்சி செய்து சாப்பிட உடல் தேறும் நரம்பு தளர்ச்சி தீரும்.

நீர்முள்ளி:
5 கிராம் நீர்முள்ளி விதையை அரை லிட்டர் தண்ணீரிலிட்டு சுண்டக் காய்ச்சி காலை மாலை இருவேளை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட உடம்பில் உள்ள கெட்ட நீர் கழிந்த, நீர் எரிச்சல், தேகம் அனல் போல கொதித்தல் போன்ற குறைகள் நீங்கும். நீர்முள்ளி விதை உடலைப் பலப்படுத்தி ரத்தத்தைச் சுத்தம் செய்து விந்து வளர்ச்சியை உண்டாக்கும்.

Previous articleஒரே மாதத்தில் ஆண்மை பெருக செய்யும் அற்புத மருந்து..!!
Next articleவாழை இலையின் பயன்கள் ! முன்னோர்களின் வாழ்க்கை முறை !