Home Patti Vaithiyam உடலுறவில் குதிரை பலம் பெற உதவும் மூலிகை பற்றி தெரியுமா?

உடலுறவில் குதிரை பலம் பெற உதவும் மூலிகை பற்றி தெரியுமா?

0
8447

அஸ்வகந்தா மூலிகை மன அழுத்தத்தை குறைக்க பயன்படுகிறது. இது உடலில் இருக்கும் மன அழுத்தத்தை தரும் ஹார்மோன்களை சரி செய்து உங்களின் மன அழுத்தத்தை போக்குகிறது. நீங்கள் மிக சோர்வாகவும், மன அழுத்தத்துடன் இருப்பவராக இருந்தால் இந்த மூலிகை பயனுள்ளதாக இருக்கும்.

பல ஆராய்ச்சிகளில் அஸ்வகந்தா நரம்பு மண்டலத்தை சிறப்பாக செயல்பட வைக்க உதவுவதாக தெரிவித்துள்ளன. இது நியாபக சக்தியை அதிகரிப்பதாகவும், படிக்கும் திறனை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும், மன இறுக்கத்தை போக்கவும் இது உதவுகிறது.

அஸ்வகந்தா நோய் எதிர்ப்பு திறனை கொண்டுள்ளது. இதில் கேன்சரை எதிர்த்து செயல்படும் ஆற்றல் நிறைந்திருக்கிறது. நுரையீரல், மார்பகம், தோல் மற்றும் வயிற்றுப் புற்றுநோய்களை எதிர்த்து செயல்படும் திறன் இதற்கு உள்ளது.

அஸ்வகந்தா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் அடிக்கடி வரும் சில உடல் உபாதைகளில் இருந்து நாம் தப்பிக்க முடியும். இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புத் திறனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

அஸ்வகந்தா மூலிகையில் அமுக்கிரா கிழங்கு எனவும் அழைக்கப்படுகிறது. இதில் சீமை அமுக்கிரா மற்றும் நாட்டு அமுக்கிரா என இரு வகைகள் உண்டு. இதில் சீமை அமுக்கிரா ஆண்மையை அதிகரிக்க உதவுகிறது. இது மூலிகை வயாகரா எனவும் அழைக்கப்படுகிறது.

அஸ்வகந்தா மூளையின் வேகத்தை அதிகரிக்கும். மூளை அழற்சி போன்றவற்றை போக்கும். உடல் மற்றும் மனதில் ஏற்படும் சில பிரச்சனைகளை அஸ்வகந்தா சரி செய்யும். இனப்பெருக்க உறுப்புகளில் இரத்த ஓட்டத்தை பெருக்கி நீங்கள் உடலுறவில் வேகமாக செயல்பட உதவும்.

அஸ்வகந்தா கசப்பு தன்மை உடையது தான் என்றாலும், இது கை, கால் நடுக்கம், வாத நோய்கள், நரம்பு தளர்ச்சி, வயிற்றுப்புண், நரம்பு தளர்ச்சி, ஆண்மை குறைவு, குடல் பிரச்சனைகள், பசியின்மை ஆகியவற்றை சரி செய்யும் திறன் கொண்டது.

Previous articleகொள்ளுவை பற்றி நீங்கள் அறியாத அதிசய மருத்துவ குணங்கள்!
Next articleகருமையான, நீண்ட கூந்தல் கொண்ட பெண்கள் இந்த உணவை தான் சாப்பிடுகிறார்களாம்!