அவசரமாக முடி உதிர்வைத் தடுக்கும் நாட்டு வைத்தியம் பற்றி அறிந்துகொள்ளுங்கள்!

0

வழுக்கை விழ ஆரம்பித்ததும் உடனேயே அதனை சரிப்படுத்து வதற்கான வழிகளைக் கையாள வேண்டும். இல்லாவிடில் அதனைக் குணப்படுத்துவது கடினம்.

உடலில் அதிக உஷ்ணம், மன அமைதியின்மை போன்றவற்றாலும் வழுக்கை ஏற்படுவது உண்டு. சிலருக்கு பரம்பரை காரணமாகவும் வழுக்கை ஏற்படுவது உண்டு.

வழுக்கையை சரிப்படுத்த சில வழிமுறைகள்:

இலந்தை இலையை அரைத்து அதன் சாற்றை வழுக்கை உள்ள இடத்தில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெயில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு அன்றாடம் உப யோகித்து வந்தால் வழுக்கை ஏற்படுவதை தவிர்க்கலாம்.

வழுக்கை விழுவதற்கான காரணங்களில் புழுவெட்டும் ஒன்று. இதற்கு சோற்றுக் கற்றாழையை எடுத்து அதனுள் இருக்கும் வழு வழுப்பான ‘ஜெல்’ போன்ற திரவத்தை எடுத்து தலையில் தேய்த்து வந்தால் வழுக்கை விழுவதை தடுக்கலாம்.

அரளிச் செடியினை கீறி பால் எடுத்து தடவி வர புழுவெட்டினால் ஏற்படும் வழுக்கைக்கு நல்ல பயன் கிட்டும்.

சிறிய வெங்காயத்தை அரைத்து மயிர்க்கால்களில் நன்கு அழுத்தி தடவி ஊற வைத்து தலையை அலசினால் புழுவெட்டினால் ஏற்படும் வழுக்கைக்கு நல்ல பலன் கிடைக் கும்.

அதிமதுரத்தை எருமைப்பாலில் அரைத்து வாரத்திற்கு மூன்று முறை தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.

பூண்டை உலர்த்திப் பொடி செய்து அதைத் தேனில் கலந்து வழுக்கையின் மீது பூசி வந் தால் முடி வளரும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article10 ரூபாயில் புற்று நோய் பாதிப்பை குணப்படுத்த இயற்கை நாட்டு வைத்தியம்!
Next articleஆண்மைக் குறைபாடுகள் அதிசயிக்கத்தக்க வகையில் தீர்ந்துவிடும் அற்புத மூலிகை இதுதான்! எங்க பார்த்தாலும் விட்றாதீங்க!