Home Jaffna News அரசாங்கத்திற்கு ஞானசார தேரர் எச்சரிக்கை! 24 மணிநேர காலக்கெடு!

அரசாங்கத்திற்கு ஞானசார தேரர் எச்சரிக்கை! 24 மணிநேர காலக்கெடு!

0
454

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகியோரை பதவி நீக்கம் செய்வதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு பொதுபல சேனாவின் தலைவர் ஞானசார தேரர் கடும் எச்சரிக்கையுடன் 24 மணிநேர காலக்கெடு வழங்கியுள்ளார்.

நாளை நண்பகல் 12 மணிவரை இந்த காலக்கெடு வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தளதா மாளிகைக்கு முன்பாக உண்ணாவிரதமிருக்கும் அத்துரலிய ரத்ன தேரரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

24 மணித்தியாலங்களுக்குள் மேற்படி நபர்கள் பதவி நீக்கம் செய்யப்படவில்லை எனில் அனைத்து பிக்குமாரும் களத்தில் இறங்குவார்கள் என கடும் எச்சரிக்கையை அவர் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleசீக்கிரமே வீடு, மனை வாங்குற அளவுக்கு யோகம் இருக்கிற ராசிகள் யார் யார் தெரியுமா!
Next articleபுலிகள் அமைப்பின் போராளிகள் ஆயுதங்களை முஸ்லிம்களுக்கு விற்றுவிட்டு நாட்டிலிருந்து வெளியேறினார்களா!